தமிழ் நாடு, சென்னையில்செப்டம்பர் 15, 1986 ஆம் ஆண்டு அஞ்சன் சின்னப்பா, சுனிதா சின்னப்பா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.[1] இவரது தந்தை முன்னால் சுவர்ப்பந்து வெற்றிவீரராவார், மேலும் தந்தை அஞ்சன் தமிழகத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் உள்ளார்.[2]
ஜோஷ்னா சின்னப்பா 2003 ஆம் ஆண்டின் பிரிட்டனில் உள்ள செபீல்ட்டில் நடைபெற்ற பிரிட்டீஷ் சுவர்ப்பந்து பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. சென்னையிலுள்ள இந்திய சுவர்ப்பந்து கலைக் கழகத்தில் (முன்னாளில் இது ஐசிஎல் (ICL) அகாதமி என்ற பெயரில் இயங்கி வந்தது) பயிற்சிப் பெற்றவராவார், மே2012 ஆம் ஆண்டு சென்னை திறந்தவெளி சுவர்ப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா 9-11, 11-4, 11-8, 12-10 என்ற புள்ளிக் கணக்கில் பிரிட்டனின் சாரா ஜானி பெர்ரியை வீழ்த்தினார். மேலும் ஜோஷ்னா தற்போது உலக தரவரிசையில் 25 வது இடத்தில் உள்ளார்.[3]