ஞா. கிருஷ்ணபிள்ளை
ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ("Gnanamuttu Krishnapillai") (வெள்ளிமலை) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கிருஷ்ணபிள்ளை 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 20,675 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[1] 2004, 2010 தேர்தல்களில் இவர் போட்டியிடவில்லை. 2012 மாகானசபைத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[2] சில நாட்களின் பின்னர் கிருஷ்ணபிள்ளை உட்படக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் சேர வற்புறுத்தப்பட்டார்கள். ஆனாலும், எவரும் சேரவில்லை.[3] கிருஷ்ணபிள்ளை 2012 செப்டம்பர் 28 இல் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia