டாக்டர். அம்பேத்கர் நகர்
![]() டாக்டர். அம்பேத்கர் நகர் (Dr. Ambedkar Nagar - commonly known as Mhow), பொதுவாக மாவ் நகரம் என அழைக்கப்படும் இந்நகரம், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்தூர் நகரத்திற்கு தென்மேற்கே 23 கி.மீ. தொலைவில், பழைய மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலை எண் 3-இல் அமைந்துள்ளது. இவ்வூரில் அம்பேத்கர் பிறந்ததால், அவரின் நினவை போற்றும் வகையில், மாவ் நகரத்தின் பெயரை, 2003-இல் மத்தியப் பிரதேச அரசு டாக்டர். அம்பேத்கர் நகரம் என மாற்றியது.[3] இந்நகரத்தின் நிர்வாகத்தை இந்திய இராணுவத்தின் குடும்பத்தினர்கள் கொண்ட பாசறை மன்றக் குழு மேற்கொள்கிறது. மக்கள் தொகை பரம்பல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, டாக்ட. அம்பேத்கர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 81,702 ஆகும். அதில் ஆண்கள் 43,888 மற்றும் 37,814 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 862 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9308 (11.39%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.78% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 66.54%, இசுலாமியர் 29.41%, சமணர்கள் 0.45%, பௌத்தர்கள் 0.54%, கிறித்தவர்கள் 1.55%, சீக்கியர்கள் 1.32% மற்றும் பிறர் 0.19% ஆகவுள்ளனர்.[4] இராணுவப் பாசறைகளும், இராணுவப் பயிற்சி கல்லூரிகளும்1818 முதல் இந்நகரத்தில் பிரித்தானிய இந்தியாவின் இராணுவப் பாசறை உள்ளது. தற்போது இந்நகரத்தில் இந்தியத் தரைப்படையின் மூன்று இராணுவப் பயிற்சி நிலையங்கள் உள்ளது. அவைகள்: 1 மாவ் இராணுவப் பொதுப் பள்ளி, 2 இராணுவப் போர்க் கல்லூரி, 3 இராணுவத் தகவல் தொடர்பு பொறியியல் கல்லூரி. புகழ் பெற்றவர்கள்பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia