டாக்டர் ஆர். ஏ. என். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Dr. R. A. N. M. Arts and Science College) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு பகுதியிலுள்ள இரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள இருபாலர், சுயநிதிக் கல்லூரி ஆகும். 1995ஆம் ஆண்டு ஈரோடு மகளிர் கலைக் கல்லூரி எனத் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 2004ஆம் ஆண்டு இருபாலர் பயிலும் டாக்டர் ஆர். ஏ. என். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. முதலியார் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த இக்கல்லூரி கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றுள்ளது. கல்லூரியின் அறக்கட்டளையானது தமிழக அரசு மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இங்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு புதுதில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஈ) மற்றும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.[1][2][3] குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia