பாரதியார் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982-இல் உருவானது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது. ![]() இப் பல்கலைக் கழகத்தின் கீழ், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள, 133 அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார்க் கல்லூரிகள் செயல்படுகின்றன. [2] பல்கலைக்கழகத் துறைகள்பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 துறைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 54 பட்ட மேற்படிப்புகளும் முதுதத்துவமாணி, முனைவர் பட்ட ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.
பாரதியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட விரிவாக்க மையம்பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்ட விரிவாக்க மையம் 2013-ஆம் ஆண்டு முதல் ஈரோடு பகுதியில் தனியாகச் செயல்பட்டு வருகிறது. இங்குப் பல முதுநிலைப் பட்ட மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் மற்றும் பிற சேவைகளும் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 133 உறுப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன, அதில் 13 அரசுக் கல்லூரிகள், 1 வான்படை நிர்வாகக் கல்லூரி, 3 இணைக் கல்லூரிகள், 1 பல்கலைக்கழகம், 16 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 99 சுயநிதி கல்லூரிகள். [3] செயல்பட்டு வருகின்றன. அரசுக் கல்லூரிகள்
அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள்
தரவரிசைபாரதியார் பல்கலைக்கழகம் 2020-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்படி இந்திய அளவில் 21-ஆவது இடத்தை பெற்றுள்ளது. [4] பல்கலைக்கழக விடுதிகள்யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, - என்று பாடிய அனுபவ மொழிகளை உதிர்த்த பாரதியின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தில்,
போன்ற விடுதிகள் உள்ளன. நூலகம்:முதுகலை , முதுனிலை மாணவர்களுக்கும், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மற்றும் முதுமுனைவர் ஆய்வாளர்களுக்கும் தேவையான நூல்களைக் கொண்ட சிறந்த நூலக வசதியும் உள்ளது. இங்கு பன்னாட்டு மாணவர்களும் கற்கும் வண்ணம் வாசிப்பு அறை உள்ளது. நூலகம் கணினிமயப்படுத்தப்பட்டுள்ளதால் பயனர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களின் இருப்புநிலையை அறிந்துகொள்ள (கணினி மென்பொருள் வழி) முடிகிறது. இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளோர் நூல்களைத் தக்க ( அனுமதியுடன்) எடுத்துச் செல்ல முடியும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia