டி. கே. ஜி. நீலமேகம்

த. க. கோ. நீலமேகம்
T. K. G. Neelamegam
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே, 2021
தொகுதிதஞ்சாவூர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
மே 2019 – மே 2021
தொகுதிதஞ்சாவூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 செப்டம்பர் 1963 (1963-09-27) (அகவை 61)
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கரந்தை, தஞ்சாவூர்
தொழில்விவசாயம்

த. க. கோ. நீலமேகம் (T. K. G. Neelamegam)(பிறப்பு: செப்டம்பர் 27, 1963), என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2][3] இவரது தந்தை த. க. கோவிந்தன் இப்பகுதியில் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதி மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவராவார். மேலும் டி.கே.ஜி. நீலமேகம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தஞ்சாவூர் நகரச் செயலாளராக உள்ளார்.

2021 சட்டசபைத் தேர்தல்

ஏப்ரல் 6 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு 103772 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டியிட்ட தேர்தல்கள்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம்
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள் 2019 தஞ்சாவூர் திமுக வெற்றி 45.77 ஆர். காந்தி அதிமுக 28.36[4]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 தஞ்சாவூர் திமுக வெற்றி 53.25 வி. அறிவுடைநம்பி அதிமுக 29.06[5]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya