தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் 2019 மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் 2019 ஏப்ரல் 18 அன்று நடந்தது. நடைபெறும் என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. வழக்கு நடைபெறுவதால் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பருங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை என அறிவித்தது.[1] அந்த வழக்குகளை திரும்ப பெறுவதாகவும் எனவே மீதமுள்ள அந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தவேண்டும் என்று சம்பந்தபட்டவர்கள் கோரியதால், அத்தொகுதிகுளுக்கு 2019 மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் பின்னணி
2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுனர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி. டி. வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த 19 பேரிடமும் விளக்கம் கேட்டு அ.தி.மு.கவின் கொறடா ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பினார். இவர்களது செயல், தானாக முன்வந்து அ.தி.மு.கவின் உறுப்பினர் தகுதியிலிருந்து வெளியேறுவதற்குச் சமம் என்பதால் இந்த 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜேந்திரன் சபாநாயகரிடம் ஆகத்து 24ஆம் தேதியன்று கோரினார்.
இவர்களில் எஸ். டி. கே. ஜக்கையன் பிறகு ஆளும் பிரிவுக்கு ஆதரவாளராகி விட்டார். செப்டம்பர் 17ஆம் தேதியன்று சபாநாயகரைச் சந்தித்த அவர், டி. டி. வி தினகரன் தரப்பினர் தன்னை வற்புறுத்தி ஆளுனரை சந்திக்க அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதற்குப் பிறகு, மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18ஆம் தேதியன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் 1986ஆம் ஆண்டு விதிகளின்படியும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
[2]
காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகள்
ஆண்டிபட்டி
அரூர்
மானாமதுரை
பெரியகுளம்
குடியாத்தம்
பாப்பிரெட்டி பட்டி
அரவக்குறிச்சி
பரமக்குடி
பெரம்பூர்
சோளிங்கர்
திருப்போரூர்
பூந்தமல்லி
தஞ்சாவூர்
நிலக்கோட்டை
ஆம்பூர்
சாத்தூர்
ஒட்டப்பிடாரம்
விளாத்திகுளம்
திருவாரூரில் கருணாநிதி இறந்ததாலும், திருப்பரங்குன்றத்தில் போஸ் இறந்ததாலும், ஒசூரில் அமைச்சர் பாலகிருஷ்ணன் மேல் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தாக குற்றம் நிரூபணம் ஆனதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும் 18 தொகுதிகளோடு இந்த 3 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன.
ஏப்ரல் 18 தேர்தல்
மக்களவையின் 2ஆம் கட்ட தேர்தலுடன் சேர்த்து கீழ்கண்ட 18 தொகுதிகளுக்கும் ஏப்பிரல் 18 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.[3]
சூலூர் அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து மார்ச் 31, 2019 அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கும் சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மக்களவையின் ஏழாம் கட்டத்துடன் சேர்த்து மே 19 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.[4]
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
நிலைகள்
ஆண்கள்
பெண்கள்
மற்றவர்கள்
மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தவர்கள்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருந்த வேட்பாளர்கள்
தேர்தல் முடிவுகள்
22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 23 மே 2019 நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக 9 தொகுதிகளிலும்; திமுக 13 தொகுதிகளிலும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.[5]