டீ கடை ராஜா
டீ கடை ராஜா (Tea Kadai Raja) (தமிழ்: 2016 இல் Indian தமிழகத் திரைப்படத்துறை காதல் திரைப்படம். எழுதி இயக்கியவர்கள் மருது ராஜா / ராஜா சுப்பையா. 2014 இல் வெளிவந்தவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்) படத்தில் இடம்பெற்ற டீ கடை ராஜா என்ற பாடலைக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.[1] எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் [2] இப்படத்தில் மருது ராஜா / ராஜா சுப்பையா., நேஹா காயத்திரி, யோகி பாபு, ஷர்மிளா தாபா, மதன் பாப் போன்றோர் நடித்திருந்தனர். 2016 ஏப்ரல் 8 அன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட்டனர். தயாரிப்புதனுஷ் (நடிகர்), சமந்தா ருத் பிரபு மற்றும் ஏமி சாக்சன் ஆகியோர் நடித்திருந்த தங்க மகன் (2015 திரைப்படம்) என்ற திரைப்படத்திற்கு டீ கடை ராஜா என்ற பெயர் பரிசீலிக்கப்ட்டது.[3] பின்னர், 'டீ கடை ராஜா' என்ற பெயரை எ ஃபன்டூண் டாக்கீஸ் புரடக்சன் சார்பில் மருது ராஜா / ராஜா சுப்பையா ஆகிய இருவரும் தங்களது படைப்பிற்கு தேர்ந்தெடுத்தனர்.[4] கதைகதை வளர்ந்துவரும் ஒரு நகரத்தில் வாழும் சிறுவர்களை சுற்றியும் மற்றும் அவர்களது நகர்ப்புற பின்னணி பற்றியும், சிறுவர்களுக்கு நிகழும் காதல் விவகாரம் பற்றியும் பேசுகிறது.[4] நடிகர்கள்
வெளியீடு"பீப் போடு" பாடல் முன்னோட்டம் 31 மார்ச் 2016இல் வெளிவந்தது. படம் 8 ஏப்ரல் 2016இல் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்] வெளியிட்டது. படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை யூடியூப் மற்றும் ராஜ் தொலைக்காட்சி பெற்றனர் ஒலித்தொகுப்புஒன்பது பாடல்கள் அடங்கிய இதன் பாடல் தொகுப்பை தன்ராஜ் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார். இதில் ஒருபாடல் இசைக்கருவிகளை மட்டுமே கொண்டு இசையமைக்கப்பட்டது. ஒரு பாடலை கானா பாலா பாடியுள்ளார்.
விமர்சனம்
பட வெளியீட்டுக்கு முன் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி ராமசாமி திரைப்படத்தை பார்த்து முதல் பாதியில் திரைக்கதை இறுக்கமாக இருப்பதாகவும் , இரண்டாம் பாதியில் நகைச்சுவை மிகவும் குறிப்பிடத்தக்கது பாராட்டினார்.[5] மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia