டுவிங்கிள் கன்னா
டுவிங்கிள் கன்னா (Twinkle Khanna; 29 டிசம்பர் 1974) இந்தியத்திரைப்பட நடிகையும் உட்புற வடிவமைப்பாளர் ஆவார். இவர் பிலிம்பேர் சிறந்த அறிமுக விருதினை பர்சாத் (1995) என்னும் திரைப்படத்திற்காகப் பெற்றார். இவர் பாலிவுட், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அஜய் தேவ்கான், சைஃப் அலி கான், ஆமிர் கான், சல்மான் கான், சாருக் கான், வெங்கடேஷ் (நடிகர்), கோவிந்தா, அக்ஷய் குமார் ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார். தொழில் வாழ்க்கைபாபி தியோல் ஜோடியாக பர்சாத் (1995) என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். இந்தப் படம் வசூலில் வெற்றி பெற்றது. அத்துடன் இப்படத்தில் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். சற்றே மாறுகண் கொண்டிருந்த நிலைக்காக ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்ட கன்னா, பல படங்களில் நடித்து அவற்றிற்காக சிறந்த விமர்சனங்களும், பார்வையாளர்களின் அங்கீகாரமும் பெற்றுள்ளார். சொந்த வாழ்க்கைஇவர் டிம்பிள் கபாடியா, ராஜேஷ் கன்னா என்போரின் மகளாவார். இவர் ரிங்கி கன்னாவின் சகோதரி. இவரது சித்தி சிம்பிள் கபாடியா. டுவிங்கிள் கன்னா ஒரு பஞ்சாபி, குஜராத்திக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் அக்ஷய் குமார் என்னும் பாலிவுட் நடிகரின் மனைவியாவார். திருமணம் 2001 இல் இடம்பெற்றது. இவர் தனது திருமணத்திற்குப் பிறகு திரைப்படத் துறையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்; அதன் பிறகு உள் அலங்கார வடிவமைப்புகளில் ஈடுபட்டுள்ளார். திரைப்பட விவரங்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia