முகமது ஆமீர் உசேன் கான் (Aamir Khan பிறப்புஃ 14 மார்ச் 1965, இவர் ஓர் இந்திய நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தொலைக்காட்சி ஆளுமை ஆவார். ஊடகங்களில் "மிஸ்டர் பெர்ஃபெக்சனிஸ்ட்" என்று குறிப்பிடப்படும் இவர், பல்வேறு திரைப்பட வகைகளில், குறிப்பாக கல்வி மற்றும் பாலின சமத்துவம் போன்ற சமூகப் பிரச்சினைகளை எழுப்பும் அல்லது இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ உள்ள சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களில் நடித்தமைக்காகப் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3][4] 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது தொழில் வாழ்க்கையின் மூலம், கான் இந்திய சினிமாவின் மிகவும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[5][6] ஒன்பது பிலிம்பேர் விருதுகள், நான்கு தேசியத் திரைப்பட விருதுகள் மற்றும் ஓர் ஆக்டா விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ மற்றும் 2010 ஆம் ஆண்டில் பத்ம பூசண் ஆகிய விருதுகளை இந்திய அரசு இவருக்கு வழங்கியுள்ளது, மேலும் 2017 ஆம் ஆண்டில் சீன அரசாங்கத்திடமிருந்து கவுரவப் பட்டத்தைப் பெற்றார்.[7][8]
அமீர்கான் முதன்முதலில் தனது மாமா நசீர் ஹுசைனின் யாதோன் கி பாராத் (1973) படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையில் தோன்றினார். கயாமத் சே கயாமத் தக் (1988) படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து முழுநேர நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ராக் (1989) படத்தில் இவரது நடிப்பிற்காகச் சிறப்புப் பிரிவில் தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது. 1990களில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற தில் (1990), ரங்கீலா (1995), ராஜா இந்துஸ்தானி (1996) உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், இதற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் பிலிம்பேர் விருதை வென்றார்.[9]
ஆரம்பகால வாழ்க்கை
முகமது அமீர் உசேன் கான் 1965 மார்ச் 14- இல் மும்பையில் திரைப்படத் தயாரிப்பாளரான தாஹிர் உசேன் மற்றும் ஜீனத் உசேன் ஆகியோரின் நான்கு குழந்தைகளில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[10][11] பைசல் கான் எனும் இளைய சகோதரரும் ஃபர்ஹத் மற்றும் நிகாத் கான் எனும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.[12][13][14]
இவரது குடும்பம் ஆப்கானித்தானில் உள்ள ஹெறாத்தினைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளது கானின் தந்தைவழித் தாத்தா ஒரு பஷ்தூன்ஜமீன்தார் பின்னணியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியராக இருந்தார், அதே நேரத்தில் இவரது தந்தைவழிப்பாட்டி ஓர் அராபியர் ஆவார், இவர் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தாவினைப் பூர்வீகமாகக் கொண்டவரும் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் மருமகளுமாவார்.[15] மவுலானா ஆசாத்தைப் பற்றி ஒரு படம் தயாரிக்க கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.[15][16] மணிப்பூரின் 16வது ஆளுநரும், மவுலானா ஆசாத்தின் பேத்தியுமான நஜ்மா ஹெப்துல்லா இவரது உறவினர் ஆவார்.[17]
தொழில் வாழ்க்கை
உசைனுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர்களால் இயக்கப்பட்ட ஆவணப்படங்களிலும் நடித்தார்.[18] இயக்குநர் கேதன் மேத்தா அந்தப் படங்களில் கானைக் கவனித்தார், மேலும் குறைந்த நிதியில் தயாரிக்கப்பட்ட திரைப்படமான ஹோலியில் இவருக்கு ஒரு கதாப்பாத்திரத்தை வழங்கினார்.[18][19] இது ஹோலி மகேஷ் எல்குஞ்ச்வாரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது, மேலும் இந்தியாவில் பகிடிவதை நடைமுறையைக் கையாண்டது[20] நியூயார்க் டைம்ஸ் இந்த படம் "மிகையுணர்ச்சி கொண்டது" ஆனால் "தொழில்முறை அல்லாத நடிகர்களால் மிகவும் கண்ணியமாகவும் உற்சாகமாகவும் நிகழ்த்தப்பட்டது" என்று விம்ர்சனம் செய்திருந்தது.[21]
ஹோலி பரந்த பார்வையாளர்களை ஈர்க்கத் தவறிவிட்டது, ஆனால் உசைனும் அவரது மகன் மன்சூரும் அறிமுகமான கயாமத் சே கயாமத் தக் (1988) படத்தில் ஜூஹி சாவ்லாவிற்கு இணையாக ஆமிர் கானை நடிக்க வைத்தனர்.[20] இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. ஆமிர் கான் பரவலாக அறியப்பட்ட நாயகராக ஆனார். சிறந்த அறிமுக நாயகர் உட்பட ஏழு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றது.[22]
திரைப்பட வாழ்க்கை
நடிகராக
ஆண்டு
திரைப்படம்
பாத்திரம்
குறிப்புகள்
1973
யாடோன் கி பாரத்
இளம் ராடன்
1974
மத்தோஷ்
குழந்தை நட்சத்திரம்
1984
ஹோலி
மதன் ஷர்மா
1988
குயாமத் சே குயாமத் டக்
ராஜ்
வெற்றியாளர் , சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
1989
ராக்
அமீர் ஹூசைன்
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
லவ் லவ் லவ்
அமித்
1990
அவ்வல் நம்பர்
சன்னி
தும் மேரே ஹோ
சிவா
dil
ராஜா
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
தீவானா முஜ் சா நஹின்
அஜய் ஷர்மா
ஜவானி ஜிந்தாபாத்
ஷஷி
1991
அஃப்சானா பியார் கா
ராஜ்
தில் ஹாய் கி மன்டா நஹின்
ரகு ஜெட்லி
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
இசி கா நாம் ஜிந்தகி
சோட்டு
டவ்லட் கி ஜங்க்
ராஜேஷ் சௌத்ரி
1992
ஜோ ஜீடா ஓஹி சிக்கந்தர்
சஞ்சய்லால் ஷர்மா
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
1993
பரம்பரா
ரன்பீர் பிருத்வி சிங்
ஹம் ஹெயின் ரஹி பியார் கே
ராகுல் மல்ஹோத்ரா
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
1994
அன்டாஸ் அப்னா அப்னா
அமர் மனோகர்
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
1995
பாசி
இன்ஸ்பெக்டர் அமர் தாம்ஜீ
ஆடங்க் ஹை ஆடங்க்
ரோஹன்
ரங்கீலா
முன்னா
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
அகேலே ஹம் அகேலே தம்
ரோஹித்
1996
ராஜா இந்துஸ்தானி
ராஜா இந்துஸ்தானி
வெற்றியாளர் , சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
1997
இஷ்க்
ராஜா
1998
குலாம்
சித்தார்த் மராத்தே
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார் பிலிம்பேர் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்
1999
சர்ஃபரோஸ்
அஜய் சிங் ரத்தோட்
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
மாண்
தேவ் கரண் சிங்
எர்த் (1947 )
தில் நவாஷ்
2000
மேலா
கிஷன் பியாரே
2001
லகான்
புவன்
வெற்றியாளர், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
தில் சாத்தா ஹை
ஆகாஷ் மல்ஹோத்ரா
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
2005
மங்கள் பண்டே: தி ரய்சிங்
மங்கள் பாண்டே
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
2006
ரங் தே பசந்தி
தல்ஜித் சிங் 'DJ'
சிறந்த நடிப்புக்கான பிலிம்ஃபேர் கிரிட்டிக்ஸ் விருது வென்றார் , சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
ஃபனா
ரேஹன் குவாத்ரி
2007
தாரே ஜமீன் பர் (லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் )
ராம் ஷங்கர் நிகும்ப்
சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்
2008
கஜினி
சஞ்சய் சிங்கானியா.
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டார்
↑ 15.015.1Manwani, Akshay (2016). Music, masti, modernity: the cinema of Nasir Husain (First published in India ed.). Noida, Uttar Pradesh, India: HarperCollins Publishers India. ISBN978-93-5264-097-3. Jaffar Husain was a Pathan and belonged to a family of zamindars, albeit of modest landholdings, settled in Shahabad (...) Aamna, Husain's mother, was of Arab ancestry. Her forefathers originally hailed from Jeddah before successive generations found their way to Calcutta, finally settling in Bhopal (...) his maternal grandmother, Fatima Begum, was a well-educated woman and was appointed the inspector of schools by nawaab of Bhopal. This lady's brother was the well-known freedom fighter and scholar Maulana Abul Kalam Azad.