டேனி பாயில்டேனியல் பிரான்சிசு பாயில் (Daniel Francis Boyle பிறப்பு 20 அக்டோபர் 1956) ஓர் ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமாவார். ஷாலோ கிரேவ் (1994), டிரெய்ன்ஸ்பாட்டிங் (1996), அதன் தொடர்ச்சியான டி2 டிரெய்ன்ஸ்பாட்டிங் (2017), தி பீச் (2000), 28 டேஸ் லேட்டர் (2002), சன்ஷைன் (2007), ஸ்லம்டாக் மில்லியனர் (2008), 127 ஹவர்ஸ் (2010), ஸ்டீவ் ஜாப்ஸ் (2015), எஸ்டர்டே (2019) ஆகிய படங்களில் பணியாறியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். பாயலின் முதல் படமான ஷாலோ கிரேவ் சிறந்த பிரித்தானியப் படத்திற்கான பாஃப்டா விருதை வென்றது. பிரித்தானியத் திரைப்பட நிறுவனம் இவரது டிரெய்ன்ஸ்பாட்டிங்கை 20 ஆம் நூற்றாண்டின் 10வது சிறந்த பிரித்தானியப் படமாக மதிப்பிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு பாயலின் குற்ற நாடகத் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர், அந்த தசாப்தத்தின் மிகவும் வெற்றிகரமான பிரித்தானியத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம், பத்து அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த இயக்கநருக்கான அகாதமி விருது உட்பட எட்டு விருதுகளை வென்றது. சிறந்த இயக்கநருக்கான கோல்டன் குளோப், பாஃப்டா விருதையும் வென்றார். 127 ஹவர்ஸ் என்ற உயிர்வாழும் நாடகத்தை எழுதித் தயாரித்ததற்காக பாயில் மேலும் இரண்டு அகாதமி விருதுக்கானப் பரிந்துரைகளைப் பெற்றார். 2012 ஆம் ஆண்டில், 2012 கோடைகால ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு பாயில் கலை இயக்குநராக இருந்தார். பின்னர் அவருக்கு புத்தாண்டு கௌரவங்களின் ஒரு பகுதியாக நைட்ஹுட் எனும் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால், இவர் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி நம்பிக்கைகள் காரணமாக அதை நிராகரித்தார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விடேனி பிரான்சிஸ் பாயில் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி,[1] இங்கிலாந்து, ராட்க்ளிஃப், மான்செஸ்டரின் நகர மையத்திற்கு வடக்கே, கவுண்டி கால்வேயைச் சேர்ந்த ஐரியப் பெற்றோர்களான பிராங்க் - அன்னி பாயில் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு மேரி என்ற இரட்டை சகோதரியும், பெர்னடெட் என்ற தங்கையும் உள்ளனர், இருவரும் ஆசிரியர்கள் ஆவர். [2] [3] தொழில் வாழ்க்கைநாடகம் மற்றும் தொலைக்காட்சி![]() பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1982 ஆம் ஆண்டில் ராயல் திரையரங்கத்திற்குச் செல்வதற்கு முன்பு, ஜாயிண்ட் ஸ்டாக் தியேட்டரில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு ஹோவர்ட் பிரெண்டனின் தி ஜீனியஸ் மற்றும் எட்வர்ட் பாண்டின் சேவ்டு ஆகியவற்றை இயக்கினார். ராயல் ஷேக்சுபியர் நிறுவனத்திற்காக ஐந்து தயாரிப்புகளையும் இயக்கியுள்ளார்.[4] 1987 ஆம் ஆண்டில் பிபிசியின் வடக்கு அயர்லாந்துப் பிரிவின் தயாரிப்பாளராகத் தொலைக்காட்சியில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது, ஆலன் கிளார்க்கின் சர்ச்சைக்குரிய எலிஃபண்ட் திரைப்படத்தைத் தயாரித்தார். பின்னர், அரைசு அண்ட் கோ, நாட் ஈவன் காட் இஸ் வைஸ் இனாஃப், ஃபார் தெ கிரேட்டர் குட், ஸ்கவுட், இன்ஸ்பெக்டர் மோர்ஸின் இரண்டு அத்தியாயங்கள் ஆகியற்றை இயக்கினார். [5] சொந்த வாழ்க்கைபல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, நடிகை பிரான்சிஸ் பார்பரை காதலித்தார். [6] பாயில் அரசியலமைப்பு குடியரசுக் கட்சிசியினைச் சேர்ந்தவராவார். [7] இலண்டனின் மைல் எண்டில் வசிக்கிறார். [8] அங்கீகாரம்2010 ஆம் ஆண்டில், தி டேப்லெட் பாயிலை பிரிட்டனின் மிகவும் செல்வாக்கு மிக்க உரோமன் கத்தோலிக்கர்களில் ஒருவராகக் குறிப்பிட்டது. [9] பிபிசி பாயிலை "பிரிட்த்தானியத் திரைப்படத் துறையின் டைட்டன் என்று குறிப்பிட்டது. [10] விருதுகளும் பரிந்துரைகளும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia