ஈலிய கசான் (/ˈiːliəkəˈzæn/[1][2] இயற்பெயர் ஈலிய கசான்ட்ஸோக்லோ ( கிரேக்கம்: Ηλίας Καζαντζόγλου ) செப்டம்பர் 7, 1909 - செப்டம்பர் 28, 2003) ஒரு கிரேக்க-அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். தி நியூயார்க் டைம்ஸ் இவரை பிராடுவே மற்றும் ஹாலிவுட் வரலாற்றில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் செல்வாக்குமிக்க இயக்குநர்களில் ஒருவர் எனக் கூறியது. [3]
இவர் கான்ஸ்டண்டினோபிலில் பிறந்தார் .வில்லியம்ஸ் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆப் டிராமாவில் பயின்றார். பிறகு எட்டு ஆண்டுகள் தொழில்முறை நடிகராக நடித்தார். 1932ஆம் ஆண்டு குழு நாடக அரங்கு என்பதில் சேர்ந்தார்.1947ஆம் ஆண்டு ஆக்டர்ஸ் ஸ்டுடியோ என்பதனை நிறுவினார்.சிட்டி ஃபார் கான்வெஸ்ட் (1940) உட்பட ஒரு சில படங்களில் கசான் நடித்தார். [4]
நடிகர்களிடமிருந்து சிறந்த நாடக நடிப்பை வெளிப்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார்.இவர் இயக்கத்தின் கீழ் 21 நடிகர்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை ஆகியுள்ளனர்.இதில் ஒன்பது ஆஸ்கர் விருது கிடைத்தன. எ ஸ்ட்ரீட்கார் நேமட் டிசையர் (1951), ஆன் தி வாட்டர்ஃபிரண்ட் (1954), ஈஸ்ட் ஆஃப் ஈடன் (1955) உள்ளிட்ட வெற்றிகரமான படங்களின் பாகங்களை இயக்கியுள்ளார். அவரது தொழில் வாழ்க்கையில், சிறந்த இயக்குநருக்கான இரண்டு ஆஸ்கார் விருதுகளையும், மூன்று டோனி விருதுகளையும், நான்கு கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் கௌரவ ஆஸ்கார் விருதினையும் வென்றுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
ஈலிய கசான் இஸ்தான்புல்லின் ஃபெனர் மாவட்டத்தில், கபடோசிய கிரேக்க பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் அனத்தோலியாவில் உள்ள கெய்சேரியிலனைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர் . [5][6][7] இவர் தனது பெற்றோர்களான ஜார்ஜ் மற்றும் அதீனா கசான்ட்ஸோக்லோ ( நீ ஷிஷ்மனோக்லோ) ஆகியோருடன் 1913 ஜூலை 8 அன்று அமெரிக்காவிற்கு வந்தார். [8] ஈலியாவின் சகோதரர் அவ்ராம், பேர்லினில் பிறந்தார். இவர் ஒரு மனநல மருத்துவர் ஆவார். [9]:21
கசான் கிரேக்க ஆர்த்தடக்ஸ் மதத்தில் வளர்க்கப்பட்டார். மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதன் சேவைப் பனிகளில் கலந்து கொண்டார். அங்கு இவர் தனது தந்தையுடன் பல மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. அவரது தாயார் பைபிளைப் படிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தபோதிலும் இவர் தேவாலயத்திற்கு செல்லவில்லை. கசானுக்கு சுமார் எட்டு வயதாக இருந்தபோது இவரது குடும்பம் நியூயார்க்கில் உள்ள நியூ ரோசெல்லுக்கு குடிபெயர்ந்தது. அருகிலேயே ஆர்த்தடக்ஸ் தேவாலயம் இல்லாததால் இவரது தந்தை இவரை ஒரு ரோமன் கத்தோலிக்க கேடீசிசம் பள்ளிக்கு அனுப்பினார். [10]
மேடை வாழ்க்கை
வில்லியம்ஸ் கல்லூரியில் பயின்ற இவர் பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆப் டிராமாவில் பயின்றார். பிறகு எட்டு ஆண்டுகள் தொழில்முறை நடிகராக நடித்தார். 1932ஆம் ஆண்டு குழு நாடக அரங்கு என்பதில் சேர்ந்தார். குழு நாடக அரங்கின் கோடைகால ஒத்திகை 1930 கள் மற்றும் 1940 களின் முற்பகுதியில் கனெக்டிகட்டின் நிக்கோல்ஸ் கிராமப்புறத்தில் அமைந்துள்ள பைன் புரூக் கன்ட்ரி சங்கத்தில் நடைபெற்றது. இவருடன் ஹாரி மோர்கன், ஜான் கார்பீல்ட், லூயிஸ் ரெய்னர், பிரான்சிஸ் பார்மர், வில் கீர், ஹோவர்ட் டா சில்வா, கிளிஃபோர்ட் ஓடெட்ஸ், லீ ஜே. கோப் மற்றும் இர்வின் ஷா ஆகிய பல கலைஞர்களும் இருந்தனர் . [11][12][13]
↑"Elia Kazan". www.britannica.com. Retrieved 2010-09-10. Elia Kazan, original name Elia Kazanjoglous (b. September 7, 1909, Istanbul, Ottoman Empire—d. September 28, 2003, New York City, U.S.), Turkish-born American director and author, noted for his successes on the stage, especially with plays by Tennessee Williams and Arthur Miller, and for his critically acclaimed films. At age four, Kazan was brought to the United States with his immigrant Greek family.
↑Kazan: the master director discusses his films : interviews with Elia Kazan.