டைகுளோரோ(1,5-வளைய ஆக்டாடையீன்) பிளாட்டினம்(II)(Dichloro(1,5-cyclooctadiene)platinum(II)) என்பது C8H12Cl2Pt என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட பிளாட்டினத்தின் கரிம உலோக சேர்மம் ஆகும். சுருக்கமாக (Pt(cod)Cl என்று இதைக் குறிப்பிடுவார்கள். டைகுளோரோ(1,5-சைக்ளோ ஆக்டாடையீன்) பிளாட்டினம்(II) என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. திண்ம நிலையில் நிறமற்ற சேர்மமாக காணப்படுகிறது. வளைய ஆக்டாடையீனை அல்லது குளோரைடு ஈந்தணைவிகளை இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் பிற பிளாட்டினம் சேர்மங்களை உருவாக்குவதில் தொடக்க வினைபொருளாக பயன்படுகிறது. 1,5-வளைய ஆக்டாடையீனின் பல்வேறு அணைவுச் சேர்மங்களில் இச்சேர்மமும் ஒன்றாகும்.
பொட்டாசியம் டெட்ராகுளோரோபிளாட்டினேட்டுடன் டையீனைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் டைகுளோரோ(1,5-வளைய ஆக்டாடையீன்) பிளாட்டினம்(II) சேர்மத்தை தயாரிக்கலாம் :[1]
K2PtCl4 + C8H12 → PtCl2C8H12 + 2 KCl.
இச்சேர்மம் சதுரதள வடிவத்தில் படிகமாவதாக எக்சு கதிர் படிகவியல் ஆய்வு தெரிவிக்கிறது [2][3].
↑Anil B. Goel, Sarla Goel, Don Van Der Veer (1982). "Chemistry of Metal diene complexes: X-ray crystal structure of dichloro(1,5-cyclooctadine)platinum(II)". Inorganica Chimica Acta65: L205-L206. doi:10.1016/S0020-1693(00)93548-5.
↑Ashfaquzzaman Syed; Edwin D. Stevens; Sandra G. Cruz (1984). "Reexamination of the π bonding in dichloro(cycloocta-1,5-diene)platinum". Inorg. Chem.23 (22): 3673–3674. doi:10.1021/ic00190a053.
மேலும் படிக்க
J. L. Butikofer, E. W. Kalberer, W. C. Schuster, and D. M. Roddick, “The Crystal Structure of Dichloro(norbornadiene)platinum(II): A Comparison to Dichloro(cyclooctadiene)platinum(II),” Acta Crystallogr. C. 2004, m353-m354.