தகடு (திரைப்படம்)
தகடு (Thagadu) என்பது 2016ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். எம். தங்கதுரை எழுதி இயக்கிய இப்படத்தில் பிரபா, அஜய், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படமானது 2016 செப்டம்பர் 2 அன்று வெளியானது.[1][2] நடிகர்கள்
தயாரிப்புஇப்படத்தில் சனம் ஷெட்டி இளவரசி வேடத்தில் நடித்தார்.[3][4] இப்படத்தில் கல்லூரி மாணவர்களாக பல புதுமுகங்கள் நடித்தனர்.[5] படத்தில் இடம்பெற்ற வரலாற்று காலகட்டப் பகுதிகள் ஆந்திராவின் கங்குண்டி கோட்டையில் படமாக்கப்பட்டன. இப்படத்தில் பிரபா, அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படத்தின் இசை வெளியீடானது 2016 சூலையில் நடந்தது. இதில் தமிழ் திரையுலகில் ஆளுமைகளான ஆர். கே. செல்வமணி, டி. சிவா, பேரரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.[6] வெளியீடுடைம்ஸ் ஆப் இந்தியா சமயம் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டை வழங்கியது. விமர்சகர் கதையை விமர்சிக்கும் போது வரலாற்றுக் கால காட்சிகளைப் பாராட்டினார்.[7] மலை மலரின் ஒரு விமர்சகர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார், கதை "பழையது" என்று கூறினார்.[8] திரைப்பட போர்ட்டல் இஃப்லிக்ஸ்.காமில் எழுதப்பட்ட விமர்சனத்தில், "கதையை குறுகிய காலத்தில் சித்தரிக்க முடியும், தேவையற்ற காட்சிகள் திரைப்படத்தை ஜவ்வாக இழுக்கிறது." [9] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia