ஷாகுல் முகமது (பிறப்பு: ஆகஸ்ட் 15, 1958), தொழில் ரீதியாக ராஜ்கபூர் என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.[2] அவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் துணை நடிகராகவும் தோன்றியுள்ளார்.
பணி
- திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் திரைப்பட இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த பாரதி–வாசுவிடம் சிறிது காலம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பிறகு பல படங்களை இயக்கியுள்ளார்.
- மேலும் இவர் திரையுலகில் எம். ஜி. ஆர் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். அதனால் எம்ஜிஆரின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான அவரது தாயார் பெயரில் செயல்பட்டு வந்த சத்யா ஸ்டுடியோ பெயரையே ராஜ் கபூர் தனது இயக்கிய பல படங்களில் கதாநாயகன், கதாநாயகிகளுக்கு சத்யா என்ற பெயர் வைத்து நடிக்க வைப்பார்
- மேலும் ராஜ் கபூர் பல திரைப்படங்களில் வில்லனாகவும், நகைசுவை கலந்த குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
- சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்.[3]
திரைப்பட பணிகள்
இயக்குநர்
ஆண்டு |
திரைப்படம் |
நடிகர்கள் |
மொழி |
குறிப்பு
|
1991 |
தாலாட்டு கேக்குதம்மா |
பிரபு, கனகா |
தமிழ் |
|
1992 |
சின்ன பசங்க நாங்க |
முரளி, ரேவதி, சாரதா பிரீதா |
|
1993 |
உத்தமராசா |
பிரபு, குஷ்பூ |
|
சின்ன ஜமீன் |
கார்த்திக் (தமிழ் நடிகர்), சுகன்யா, வினிதா |
|
1994 |
சீமான் |
கார்த்திக், சுகன்யா |
|
சத்தியவான் |
முரளி, கௌதமி |
ஏப்ரல் 1 விடுதல என்னும் படத்தின் மறுஆக்கம்
|
1997 |
வள்ளல் |
சத்யராஜ், மீனா, ரோஜா செல்வமணி |
|
1998 |
அவள் வருவாளா |
அஜித் குமார், சிம்ரன், பப்லு பிரித்திவிராஜ் |
பெல்லி என்னும் தெலுகு படத்தின் மறுஆக்கம்
|
கல்யாண கலாட்டா |
சத்யராஜ், குஷ்பூ, ராசி |
|
1999 |
ஆனந்த பூங்காற்றே |
அஜித் குமார், கார்த்திக், மீனா, மாளவிகா |
வசனத்திற்கு மாநில விருது
|
2000 |
சுதந்திரம் |
அர்ஜுன், ரம்பா, ரகுவரன் |
குலாம் என்னும் இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கம்
|
2001
|
என்ன விலை அழகே
|
பிரசாந்த், அமீஷா பட்டேல், ரகுவரன், மணிவண்ணன், சுகுமாரி
|
(படம் முடிக்கப்படவில்லை - காரணம் தெரியவில்லை)
|
2002 |
சமஸ்தானம் |
சரத்குமார், சுரேஷ் கோபி, தேவயானி, அபிராமி |
|
2003 |
ராமச்சந்திரா |
சத்யராஜ், விஜயலட்சுமி |
|
2005
|
சிவலிங்கம் I.P.S.
|
சத்யராஜ், ஜோதிமயி, கார்த்திக்
|
பரத்சந்திரன் I.P.S. என்னும் மலையாளப் படத்தின் மறுஆக்கம்.
(இன்னும் வெளியாகவில்லை)
|
2006 |
குஸ்தி |
பிரபு, கார்த்திக், மான்யா |
|
2008 |
வம்பு சண்டை |
சத்யராஜ், உதய் கிரண், தியா
|
|
- தொலைக்காட்சி தொடர்கள்
நடிகர்
- திரைப்படங்கள்
- தொடர்கள்
ஆண்டு |
தொடர் |
கதாபாத்திரம் |
மொழி |
குறிப்புகள்
|
2019 – 2020 |
ரன் |
செல்வநாயகம் |
தமிழ் |
|
சொந்த வாழ்க்கை
தனது அம்மாவுடன் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்ட ராஜ்கபூரின் மூத்த மகன் சாரூக் கபூர் 17 பிப்ரவரி 2020 அன்று மெக்காவில் மரணமடைந்தார்.[4]
மேற்கோள்கள்
|