தமிழும் சரஸ்வதியும் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழும் சரஸ்வதியும் என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இந்த தொடர் விகடன் ஒளித்திரை என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, ச. குமரன் இயக்கத்தில் தீபக் தினகர் மற்றும் நச்சத்திரா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[4] இந்த தொடர் சூலை 12, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.[5] இதன் அத்தியாயங்கள் ஹாட் ஸ்டார் என்ற ஒடிடி தளத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கதை சுருக்கம்இந்த தொடரின் கதை பணக்காரரான குடும்பத்தை சேர்ந்த தமிழரசன் (தீபக் தினகர்) என்பவன் தனது குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடரமுடியாமல் குடும்பத்தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்கின்றான் ஆனால் சமூகம் அவனை படிக்காதாவன் என ஏளனம் செய்கின்றது. இதன் நடுவில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அழகான மற்றும் வெகுளித்தனமான சரஸ்வதி (நச்சத்திரா) என்ற பெண் தனது 12வது வகுப்பு பரிசையில் தேர்ச்சி செய்வதற்கு பல முறை முயற்சி செய்தும் இவளால் வெற்றி கொள்ள முடியவில்லை இதனால் குடும்பத்தினரால் உசத்தினப்படுத்தப்படுகிறாள். இப்படி வேவ்வேறு குடும்ப பின்னணியில் இருந்து வரும் இருவருக்கும் உள்ள ஒரே பிரச்சனை படிப்பு, அதையும் தாண்டி இருவரும் எப்படி வாழ்வில் ஒன்றே சேரப்போகின்றார்கள் என்பது தான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
சந்திரகலா கதாபாத்திரங்கள்
தமிழரசன் குடும்பத்தினர்
சரஸ்வதி குடும்பத்தினர்
துணைக் கதாபாத்திரங்கள்
தயாரிப்புவிகடன் ஒளித்திரை என்ற தயாரிப்பு நிறுவனம் 20 வருடங்களுக்கு மேலாக சன் தொலைக்காட்சியில் கோலங்கள் (2003-2009), திருமதி செல்வம் (2007-2013), தென்றல் (2009-2015), தெய்வமகள் (2013-2018), நாயகி (2018-2020) போன்ற பல வெற்றி தொடர்களை இயக்கி வந்ததது. 2020 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அந்த தொலைக்காட்சி நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால் நாயகி மற்றும் ரன் போன்ற தொடர்களை அவசரமாக முடித்துக் கொண்டு அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியது. 2021 ஆம் ஆண்டு முற்பகுதியில் விஜய் தொலைக்காட்சி உடன் இணைந்து ஒரு புதிய தொடரை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.[6][7] இந்த தொடருக்கான முதல் முன்னோட்டக் காட்சிகள் மே, 2021 இல் வெளியாக இருந்த தருணத்தில் கொரோனா கிருமி தோற்று நோய் காரணாமாக ஜூன் 24 இல் வெளியானது.[8] நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் கதாநாயகனாக நடிகர் தீபக் தினகர் என்பவர் மீண்டும் ஐந்து வருடங்களுக்கு பிறகு நடிக்கின்றார், இவருக்கு ஜோடியாக நச்சத்திரா என்பவர் நடிக்கின்றார்.[9] இருவரும் இதே தயாரிப்பு நிறுவனத்தில் வெவ்வேறு தொடர்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீரா கிருஷ்ணன் மற்றும் ரேகா கிரிஷ்ணப்பா[10][11][12] ஆகியோர் மீண்டும் இதே தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia