திருமதி செல்வம்

திருமதி செல்வம்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துவே. கி. அமிர்தராஜ்
திரைக்கதைவே. கி. அமிர்தராஜ்
சிவ. இல. அமல்ராஜ்
கதைS. குமரன்
இயக்கம்S. குமரன்
நடிப்பு
முகப்பு இசைடி. இமான் (தலைப்பு பாடல்)
கிரண் (பின்னணி இசை)
முகப்பிசை"சூரியனே சந்திரனே"
சுவேதா மோகன்
யுகபாரதி (பாடலாசிரியர்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்1,360
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்விகடன் குழு
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
ஒளிப்பதிவுமாட்ஸ்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்விகடன் ஒளித்திரை
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
விகடன் தொலைக்காட்சி (வலையொளி)
ஒளிபரப்பான காலம்5 நவம்பர் 2007 (2007-11-05) –
22 மார்ச்சு 2013 (2013-03-22)
Chronology
முன்னர்அவர்கள் (13:30)
செந்தூரப்பூவே (20:00)
பின்னர்தெய்வமகள் 8.00

திருமதி செல்வம் என்பது 5 நவம்பர் 2007 முதல் 22 மார்ச்சு 2013 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்தத் தொடரை விகடன் ஒளித்திரை சார்பில் இயக்குநர் எஸ். குமரன் என்பவர் இயக்க, சஞ்சீவ், அபிதா மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முதண்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இது தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் மிக அதிகமான தொலைக்காட்சி இலக்கு அளவீட்டு புள்ளிகளைப் பெற்ற தொடர் ஆகும். இந்தத் தொடரில் நடித்தற்காக நடிகை அபிதா என்பவர் சிறந்த நடிகைக்கான மயிலாப்பூர் அகடமி விருது, விவேல் சின்னத்திரை விருது, சன் குடும்பம் விருதுகள் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். நடிகர் சஞ்சீவ் சன் குடும்பம் விருதுகளில் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இந்தத் தொடர் 22 மார்ச்சு 2013 ஆம் ஆண்டு 1,360 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் தெய்வமகள் (2013-2018) என்ற தொடர் ஒளிபரப்பானது. இத்தொடர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மார்ச் 29, 2021 முதல் இரவு 09:30 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.

கதைக் கரு

இந்த தொடரின் கதை முன்னணி கதாபாத்திரமான செல்வத்தைச் சுற்றிச் சுழல்வதாகவும், அப்பாத்திரத்தின் நல்ல பண்புகள், கடின உழைப்பு மற்றும் தன் மனைவி அர்ச்சனா மீதான காதல் அவரை எவ்வாறு புதிய உயரங்களுக்கெல்லாம் இ்ட்டுச் சென்றது என்பதையும், பணம், புகழ் மற்றும் அதிகாரம் ஆகியவை அவரை எவ்வாறு கெட்டவராக மாற்றியது என்பதைக் காண்பிப்பதாகவும் அமைந்தது.

கதை சுருக்கம்

செல்வம் ஒரு இயந்திரம் பழுதுபார்ப்பவராக வேலை செய்கிறார். அவர் தனது குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூட்டிய ஒரே நபராக இருப்பதாலும், கடினமாக உழைக்க வேண்டியிருப்பதாலும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்கிறார், அவர் தனது தம்பி மற்றும் சகோதரி ஆகியோரின் கல்விககாக தனது படிப்பைக் கைவிட்டவர் ஆவார். இருப்பினும், அர்ச்சனாவை ஒரு கோவிலில் பார்த்தபின் அவர் காதலிக்கும்போது விதி ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அவரது திருமண திட்டத்திற்காக, அவர் ஒரு இயந்திரப் பொறியாளர் என்று ஒரு பொய்யைக் கூற நிர்பந்திக்கப்படுகிறார். திருமணத்திற்குப் பிறகு, உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது, அர்ச்சனா செல்வத்தை வெறுக்கத் தொடங்குகிறார், அவர் கல்வி கற்றவர் அல்ல, உண்மையில் ஒரு இயந்திரம் பழுதுபார்ப்பவர் என்பதால் அவள் ஆரம்பத்தில் அவனுடன் வாழ மறுக்கிறாள். ஆனால், இறுதியில் செல்வம் அவளிடம் வைத்திருக்கும் அன்பையும் அவனது குணத்தில் உள்ள நன்மையையும் புரிந்துகொண்டு அவனுடனான உறவை சரிசெய்ய முடிவு செய்கிறாள். காலப்போக்கில், செல்வம் தனது யாருக்காகத் தனது வீட்டையும், இயந்திரம் பழுதுபார்ப்பதற்கான கொட்டகை போன்றவற்றை இழந்தாரோ அந்த வளர்ப்பு தாய் பாக்கியம் என்பவரால் ஏமாற்றப்படுகிறார், செல்ல இடமில்லாததால், செல்வம் மற்றும் அர்ச்சனா நடைபாதையில் தூங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கிருந்து செல்வத்தின் நண்பர் சிவா அவர்களை அழைத்துச் செல்கிறார்.

அதைத் தொடர்ந்து, தம்பதியினர் சந்தோஷமாக வாழ்வதற்காக சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும், மகிழ்ச்சியான மற்றும் துன்பமான காலங்களிலும் ஒரே மாதிரி ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தார்கள் என்பதையும் கதையோட்டம் கொண்டு செல்கிறது. செல்வத்தின் நண்பர்களில் ஒருவரான நந்தினி அவருக்கும் அர்ச்சனாவுக்கும் அவர்களின் துன்பங்களில் இருந்து விடுபட உதவுவதோடு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவுகிறார். செல்வம் தனது கடின உழைப்பு, அர்ச்சனா மற்றும் நந்தினியின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் கார் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அந்தஸ்துக்கு வளர்கிறார். ஆனால், இறுதியில் நந்தினி செல்வத்துடன் தனது உறவை சந்தேகித்ததற்காகவும், அண்டை வீட்டாரின் முன்னால் தன்னை அவமதித்ததற்காகவும். அர்ச்சனாவின் தாயார் சிவகாமியைப் பழிவாங்குவதற்காக செல்வம் மற்றும் அர்ச்சனாவைப் பிரிக்க முடிவு செய்கிறார். செல்வத்தை அர்ச்சனாவிலிருந்து பிரிப்பதில் அவள் வெற்றி பெறுகிறாள், செல்வம் அர்ச்சனாவுக்கு எதிராக செல்லும்படி செய்வதன் மூலம் அவன் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொண்ட நல்ல ஒழுக்கங்களையும், அர்ச்சனா மீதான அவனது அன்பையும் இழக்கிறான். ஒரு கட்டத்தில், செல்வம் நந்தினியின் உண்மையான குணத்தையும், அவரிடமிருந்து அர்ச்சனாவைப் பிரிப்பதன் பின்னணியில் உள்ள அவளது நோக்கத்தையும் அறிந்துகொள்கிறான். அதற்காக, அவன் நந்தினியுடன் சண்டையிடுகிறான், இதற்கிடையில் நந்தினி மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்துவிடுகிறான். செல்வம் நந்தினியின் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத்தண்டனை அளிக்கிறது. செல்வம் மற்றும் அர்ச்சனா மீண்டும் ஒன்றிணைவாரா இல்லையா என்பதைக் கதை மேலும் கையாண்டது. சிறையில் இருந்து திரும்பிய பிறகு, செல்வம் அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கிறார், ஆனால் செல்வத்தால் துரோகம் செய்யப்பட்டதன் மூலம் நொந்த இதயத்துடன் அர்ச்சனா அவரை மன்னிக்கவோ அல்லது அவர் திருந்தியதையோ ஏற்றுக்கொள்ள ​​முடியவில்லை. கதை ஒரு எதிர் நிலை உச்சகட்டக் காட்சியைக் கொண்டு முடிகிறது. செல்வமும் அர்ச்சனாவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பிரித்து இருக்க நேரிடுகிறது. செல்வம் அனைத்து செல்வம் மற்றும் வாழ்க்கையை இழந்து நடைமேடைக்கே தனது வாழக்கை வந்து விட்ட தலைவிதியை நினைத்து வருந்துகிறார். "வழிநடத்துங்கள், மற்றவர்கள் வழிநடத்தட்டும். ஆனால், கவனமாக வழிநடத்துங்கள்" என்று ஒரு குறிப்புடன் கதை முடிகிறது.[1]

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • சஞ்சீவ் - செல்வம்
    • தனது குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஒரு இயந்திரம் பழுதுபார்ப்பவராக வேலை செய்கிறார். நல்ல உழைப்பாளி. தனது சொந்த உழைப்பால் பணக்கராக வளர்ந்து வருகின்றார். அர்ச்சனாவை கோயிலில் பார்த்து விட்டு விரும்பி திருமணம் செய்கின்றார்.
  • அபிதா - அர்ச்சனா செல்வம்
    • சிவகாமி மட்டும் சிவராமனின் முதலாவது மகள். தாயின் உடல் நிலை கருதி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சிறுவயதில் இருந்து குடும்ப பொறுப்புகளை முன்னிலையில் இருந்து செய்துவருகிறார். குடும்ப உறவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர். செல்வத்தின் மனைவி.
  • வடிவுக்கரசி - சிவகாமி சிவராமன்
    • தனது மகளுக்கு படித்த மாப்பிள்ளையை திருமணம் செய்துவைக்க போராடும் பாசமான தாய். எந்த ஒரு சூழ்நிலையிலும் மகளை விட்டுகொடக்காதவர். $
  • ரிந்தியா → லதா ராவ் → ரிந்தியா - நந்தினி
    • பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர், ஆரம்பத்தில் செல்வத்தை காதலித்தார். திருமணம் கைகூடாததால் செல்வத்தின் நண்பியாக இருக்கின்றார். செல்வம் மற்றும் அர்ச்சனா வாழ்வில் பிரிவு வர இவர் காரணமாகிறார்.

சிவகாமி சிவராமன் குடும்பத்தினர்

  • வடிவுக்கரசி - சிவகாமி சிவராமன்
    • வினோத், அர்ச்சனா, காவியா மற்றும் பிரியாவின் தாய்.
  • விழுதுகள் சந்தானம் - சிவராமன்
    • வினோத், அர்ச்சனா, காவியா மற்றும் பிரியாவின் தந்தை.
  • பிர்லா போஸ் - வினோத்
    • சிவகாமி மற்றும் சிவராமனின் ஒரே மூத்த மகன். குடும்பத்தினர் மீது அன்பும் மரியாதையும் கொண்டவன். அர்ச்சனா, காவியா மற்றும் பிரியாவின் சகோதரன். ஜெயந்தியின் கணவன், ரம்யாவின் தந்தை.
  • ராகவி - ஜெயந்தி வினோத்
    • சிந்தாமணியின் மகள், வினோத்தின் மனைவி மற்றும் ரம்யாவின் தாய்.
  • கவி → சிவானி - காவ்யா செரியன்
    • சிவகாமி மற்றும் சிவராமனின் இரண்டாவது மகள், வினோத், அர்ச்சனா மற்றும் பிரியாவின் ஆகியோரின் சகோதரி மற்றும் செரியனின் மனைவி.
  • தீபக் டிங்கர் - (செரியன்) சொரிமுர்த்தி அய்யனார்
    • பணக்கார வீட்டை சேர்ந்த காவியாவின் கணவன்.
  • அர்ச்சனா → காவ்யா அருண் - பிரியா தினகரன்
    • சிவகாமி மற்றும் சிவராமனின் மூண்டாவது மகள், வினோத், அர்ச்சனா மற்றும் காவியாவின் சகோதரி மற்றும் தினகரனின் மனைவி.
  • விஜய் ஆனந்த் - (தீனா) தினகரன்

செல்வத்தின் குடும்பத்தினர்

  • ஜெயமணி - பூங்காவனம் (தந்தை)
  • கே. ஆர். வத்சலா → கௌதமி பாக்கியம் பூங்காவனம்
    • வாசு மாற்றும் ராணியின் தாய் மற்றும் செல்வத்தின் மாற்றான் தாய்.
  • பிலிம் சிவம் - நாராயணன்
    • பூங்காவனத்தின் சகோதரர்.
  • தீங்கு → தேவ் ஆனந்த் - வாசு
  • அபர்ணா - ராணி ஆகாஷ்
  • ஸ்வப்னா - ரேவதி வாசு
  • சக்தி சரவணன் - ஆகாஷ்

துணை கதாபாத்திரம்

  • பிரியா - சிந்தாமணி
  • ஏ. ஈ. மனோகரன் - ரங்கராஜன்
  • சதீஷ் - செழியன்
  • அப்சரா - கவிதா
  • சர்வன் - திலீபன்
  • வெங்கட் - ரஞ்சித்
  • சூப்பர் குட் கண்ணன் - கருணை குமார்
  • ஷீலா - பார்வதி

நேரம் மாற்றம்

இத்தொடர் 5 நவம்பர் 5 2007 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்ற காரணத்தால் 17 நவம்பர் 2008 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.

மறு ஆக்கம்

இந்த தொடர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

மொழி அலைவரிசை தலைப்பு
தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி தேவதா
மலையாளம் சூர்யா தொலைக்காட்சி நிலவிளக்கு
கன்னடம் உதயா தொலைக்காட்சி ஜோக்காலி
ஹிந்தி ஜீ தொலைக்காட்சி பவித்ரா ரிஷ்டா

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

  1. "அர்ச்சனாவின் அழுகை முடிவுக்கு வரப்போகுதாமே?". filmibeat. filmibeat. Retrieved 13 October 2019.

வெளி இணைப்புகள்

சன் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி திருமதி செல்வம் அடுத்த நிகழ்ச்சி
செந்தூரப்பூவே தெய்வமகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya