கோலங்கள் என்பது சன் தொலைக்காட்சியில் நவம்பர் 24, 2003 முதல் டிசம்பர் 4, 2009 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, 1533 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்ப சூழ்நிலை பற்றிய தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை விகடன் ஒளித்திரை தயாரிக்க இயக்குநர் திருச்செல்வம் என்பவர் எழுதி, நடித்து மற்றும் இயக்கியுள்ளார்.[1]
இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக அத்தியாயங்களில் ஒளிபரப்பான தொடர் ஆகும்.[4] மற்றும் மக்களால் அதிகளவு பார்க்கப்பட்ட தொடரில் இதுவும் ஒன்றாகும். இந்த தொடரில் நடித்ததற்காக நடிகை தேவயானி (2003ஆம் ஆண்டு மற்றும் 2004ஆம் ஆண்டு) சிறந்த நடிகைக்கான விருதையும், தீபா வெங்கட் (2005ஆம் ஆண்டு) சிறந்த தோழிக்கான விருதையும் மற்றும் அஜய் கபூர் (2010ஆம் ஆண்டு) சிறந்த வில்லனுக்கான விருதையும் வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் 10 வருடம் கழித்து நவம்பர் 26, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை விகடன் தொலைக்காட்சியூடியூப் என்ற இணைய அலைவரிசையில் மறு ஒளிபரப்பு செய்தது.[5]
கதை சுருக்கம்
கணவனால் கைவிடப்பட்ட நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கர்பகம் (சத்தியப்பிரியா). கணவன் துணை இன்றி தனது 4 பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்க்குகின்றார். இவரின் மூத்த மகள் அபிநயா (தேவயானி) தைரியமும் விடாமுயரிசியும் கொண்டவள். பாஸ்கரை (அபிசேக் சங்கர்) திருமணம் செய்யும் அபி ஆனால் இவர்களின் திருமணத்தில் பல மனக்கசப்புகள் இதனால் இவர்கள் பிரிக்கின்றனர்.
கற்பகத்தின் கணவன் ஈஸ்வரமூர்த்தி (மோகன் சர்மா) காஞ்சனா (பாரதி) என்ற பெண்ணை மறுதிருமணம் செய்கின்றார். இவரின் மகனான ஆதித்தியா (அஜய் கபூர்) கோவமும் திமிரும் கொண்டவன். தொழில் ரீதியாக போட்டியிடும் அபி மற்றும் ஆதித்யா. அபியை வெல்வதற்காக அவளை கொலை செய்ய முயற்சசி செய்ய்கின்றான். அபிக்கு ஆதரவாக தொல்காப்பியன் (திருச்செல்வம்) மற்றும் உஷா (தீபா வெங்கட்) ஆதியின் முன்னாள் மனைவி இவர்களின் துணையுடன் ஆதியை எப்படி வென்றால் என்பது தான் கதை.
பாஸ்கரின் முன்னாள் மனைவி, கற்பகத்தின் மூத்த மகள், ஆனந்தி, ஆர்த்தி மற்றும் மனோகரின் சகோதரி. மிகவும் தைரியம் மற்றும் மன உறுதியும் கொண்டவள், குடும்பத்திற்கும் நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பவள் மற்றும் போராடும் குணம் கொண்டவள்.
இந்த தொடரை புதுமுக இயக்குநர் திருச்செல்வம் என்பவர் இயக்கி மற்றும் நடித்துள்ளார். இவர் இதற்க்கு முன் மெட்டி ஒலி என்ற தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தமிழ் திரைப்பட நடிகை தேவயானி நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். அதே தரும் சந்திரா லட்சுமண் மற்றும் பூர்ணிமா இந்திரஜித் நடிக்கும் முதல் தமிழ் தொடர் இதுவாகும். சீதா என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை விஜி சந்திரசேகர் நடிக்க இவருக்கு ஜோடியாக வரத்தான் என்ற கதாபாத்திரத்தில் பொன்வண்ணன் நடித்துள்ளார். நளினி, சத்யப்பிரியா, சபிதா ஆனந்த், குயிலிமௌலி போன்ற பல திரைப்பட நடிகர்களும் இந்த தொடரில் நடித்து உள்ளார்கள்.
ஒலிப்பதிவு
தலைப்பு பாடல்
இந்த தொடருக்கு தலைப்பு பாடலை பிரபல பாடலாசிரியர் பழனி பாரதி என்பவர் பாடல் எழுத, பாடகி ஹரிணி இப் பாடலை பாடியுள்ளார். இசையைப்பாளர் டி. இமான் என்பவர் இசை அமைத்துள்ளார்.
ஹிந்தி மொழியில் மாய்கே சே பாந்தி டோர் என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு பிப்ரவரி 14, 2011 முதல் அக்டோபர் 2, 2011ஆம் ஆண்டு வரை ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[10]