தமிழ்க்கடவுள் முருகன்
தமிழ்க்கடவுள் முருகன் 2017-2018 இடைப்பட்ட காலத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது சைவக்கடவுளானமுருகனின் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டதாக ஒளிபரப்பானது.[1][2][3][4] நந்தினி தொலைக்காட்சித் தொடருக்குப் பின் தமிழில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடராக தமிழ்க்கடவுள் முருகன் இடம் பிடித்திருக்கிறது.[5] கடந்த ஒக்டோபர் 2, 2017 இலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு இந்திய நேரம் 21:00 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகி வந்தது. ()[6][7] விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற பிக் பாஸ் தமிழ் மெய்மக் காண்பியத்தை பிரதியீடு செய்த தமிழ்க்கடவுள் முருகன் தொடர், 29 ஜனவரி 2018 முதல் ஒளிபரப்பு நேரத்தை, திங்கள் முதல் வெள்ளி வரை, இந்திய நேரம் 18:00 ஆக மாற்றிக்கொண்டது. 23 பிப்ரவரி 2018இல் இதன் முதலாம் பருவம் முடிவடைந்தது , அதன் இரண்டாம் பருவம் 15 எபிசோடுகளாக ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்ப பட்டது. தொடர்முருகன் இளைஞனாகத் தோற்றமளிக்கும் இத்தொடரின் முன்னோட்டமொன்று, 26 யூன் 2017 அன்று, விஜய் தொலைக்காட்சியால் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.[8] சிவன் தோன்றும் இரண்டாவது முன்னோட்டம் 5 செப்டம்பர் 2017 அன்றும், இளம் முருகன் தோன்றும் மூன்றாவது முன்னோட்டம், 11 செப்டம்பர் 2017 அன்றும், இன்னொரு முன்னோட்டம் 15 செப்டம்பர் 2017அன்றும் யூடியூப்பில் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
கதைச்சுருக்கம்சூரபதுமன், தாருகன், சிங்கமுகன் ஆகியோர் தேவர்களை வதைப்பது. தேவர்களின் வேண்டுகோளை அடுத்து சிவன் முருகனைத் தோற்றுவிப்பது. அவரை அக்கினி தேவனும், வாயு தேவனும் கங்கையில் சேர்ப்பது, கங்கை அதைச் சரவணப்பொய்கையில் சேர்ப்பது, அதைக் கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பது, தன் மூலம் முருகன் பிறக்கவில்லை என்பதால் கோபமுற்று உமை தேவர்களையும் அவர்களது தேவியரையும் சபிப்பது, பின் முருகன் கார்த்திகைப் பெண்களிடம் பல கலைகள் கற்று வாழ்வது என்று கந்தபுராணத்தைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. பார்வதி மகிஷனை அழிப்பது, பிரமனை முருகன் சிறைவைப்பது முதலான உபகதைகளுடன் இத்தொடரின் முதற்பருவம் நிறைவுற்றது. எனினும் இத்தொடரில் சித்தரிக்கப்பட்டது போல, சூரபதுமன் முருகனை அழிக்க முயல்வதோ, பார்வதிக்குத் தெரியாமல் முருகன் அவதரிப்பதோ, திருமால், இயமன் போன்றோர் மாறுவேடத்தில் வந்து முருகனுக்குக் ஆயுதப்பயிற்சி அளிப்பதோ, மூல கந்தபுராணத்தில் இல்லை.[9] நடிகர்கள்
ஒளிபரப்புகள்ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் மலையாளத்தில் மொழிமாற்றப்பட்டு, 23 அக்டோபர் 2017 இலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை ஆறு மணிக்கு, இத்தொடர் "ஸ்ரீமுருகன்" என்ற பெயரில் ஒளிபரப்பானது.[11] மா தொலைக்காட்சியில் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டு, 12 பிப்ரவரி 2018இலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ சுப்ரமணிய சரிதம் என்ற பெயரில் ஒளிபரப்பானது.[12] 2 அக்டோபர் 2017 முதல் விஜய் தொலைக்காட்சியிலும் அதன் உயர்தர எச்.டி அலைவரிசையிலும் ஒளிபரப்பாகின்றது. இலங்கை, சிங்கப்பூர், வியட்நாம், யப்பான், ஆங்காங்,மெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, மொரிசியசு,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விஜய் தொலைக்காட்சியின் சர்வதேச ஒளிபரப்பில் இத்தொடர் ஒளிபரப்பப்பட்டது. கனடாவில் விஜய் தொலைக்காட்சி கனேடியத் தமிழர் மைய அலைவரிசையான ஆசியன் தொலைக்காட்சி வலையமைப்பில் கனடிய நேரம் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பானது. பருவ விவரங்கள்
உசாத்துணைகள்
வெளியிணைப்புகள்
இவற்றைப் பார்க்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia