தமிழ்ப்பணி (இதழ்)தமிழ்ப்பணி என்பது 1967-ஆம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது தமிழ்நாட்டின், சென்னையிலிருந்து வெளியாகிறது. இதன் நிறுவனரும் சிறப்பாசிரியரும் வா. மு. சேதுராமன் ஆவார். இதன் ஆசிரியராக வ. மு. சே. திருவள்ளுவர் உள்ளார்.[1] இந்த இதழானது கவிதை, கட்டுரைகள் அடங்கிய படைப்புகளைத் தாங்கி வருகின்றது. இது மரபுக் கவிதைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதில் வா. மு. சே. யின் கவிதைகள் மற்றும் பல கவிஞர்களின் படைப்புகள் அதிகமாக இடம்பெற்றன. இப்பத்திரிகையில் பேராசிரியர் டாக்டர் சஞ்சீவி, தில்லைநாயகம், நாரண துரைக்கண்ணன் போன்றவர்களின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.[2] நூலகம் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள், தமிழின் சிறப்பை வலியுறுத்தும் கட்டுரைகள் இதில் வெளிவந்துள்ளன. புதுக் கவிதையை எதிர்த்து தமிழண்ணல் எழுதிய கட்டுரைகள் இதில் தொடர்ந்து வந்தன.[2] இவ்விதழில் தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாடு, இலங்கை மற்றும் தமிழர் பெருமளவில் வாழும் நிலப்பகுதிகளில் நிலவும் அரசியல் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுவதாக இருந்தது. 2006 ஆம் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு 2037) வரை தமிழ்ப்பணியின் 39 தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia