தரிகெரே
தரிகெரெ (Tarikere) என்பது இந்திய மாநிலமான கர்நாடகவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வட்டமாகும். இதன் தலைமையகம் இதே பெயரில் உள்ள ஒரு நகரமாகும். இது மலைநாட்டின் நுழைவாயில் என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஏனெனில் மலைநாடு பகுதி இங்கிருந்து தொடங்குகிறது. நகரத்தின் பெயர் அதைச் சுற்றியுள்ள நீர் தொட்டிகளின் எண்ணிக்கையிலிருந்து பெறப்பட்டது (கெரே என்பது ஒரு பெரிய நீர் தொட்டியின் பெயர்). இது கன்னடத்தில் 'மலநாடினா ஹெபகிலு' என்றும் அழைக்கப்படுகிறது அணுகல்சாலைதேசிய நெடுஞ்சாலை எண் 69 (முன்னர் தே.நெ.எண் 206 என அழைக்கப்பட்டது) ( பெங்களூரு முதல் ஹொன்னாவரா வரை ) தரிகெரே வழியாக செல்கிறது. மைசூரிலிருந்து மைசூர் - அர்சிகேர் வழியாக தே.நெ.எண் -69 வழியாக செல்லலாம். சிக்கமகளூரு மாவட்ட தலைமையகத்திலிருந்து, இதனை 2 வெவ்வேறு வழிகளில் அடையலாம். இதை இலிங்கடஹள்ளி வழியாகவோ, கடூர் & பிரூர் வழியாகவோ அடையலாம். இரயில்பிகூர் முதல் தலகுப்பா இரயில் பாதையில் தரிகெரே அமைந்துள்ளது. மைசூரு மற்றும் பெங்களூருவில் இருந்து சிவமோகா செல்லும் வழியில் தரிகெரேயில் நிறுத்தப்படும் இரயில்களும் உள்ளன. விமானம்அருகிலுள்ள விமான நிலையங்கள் எதுவும் இல்லை. விமானம் வழியாக பயணிக்கும் மக்கள் மங்களூரு, ஹூப்ளி அல்லது பெங்களூரு விமான நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த ஊரை அடைய மாற்று போக்குவரத்து வழிகளை தேர்வு செய்ய வேண்டும். நிலவியல்தரிகெரே 13.72 ° வடக்கிலும் 75.82 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[2] இது சராசரியாக 698 உயரத்தில் உள்ளது மீட்டர் (2290 அடி). இந்நகரம் தனது சொந்த மாவட்டத்தில் 3 வட்டங்களின் எல்லையாக உள்ளது. மேற்கில் நரசிம்மராஜபுரா, தென்மேற்கில் சிக்கமகளூரு, தெற்கே கடூர் உள்ளது. சிவமோகா மற்றும் பத்ராவதி எல்லை வடக்கே தரிகெரே மற்றும் சிவமோகா மாவட்டத்தில் உள்ளன. சித்ரதுர்கா மாவட்டத்தின் ஹொசதுர்கா கிழக்கு நோக்கி இதன் எல்லையாக உள்ளது. புள்ளிவிவரங்கள்2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[3] தரிகெரேவில் சுமார் 35,000 மக்கள் தொகை இருந்தனர். மக்கள்தொகையில் ஆண்கள் 51% ஆகவும், பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 68%, தேசிய சராசரியான 59.5% ஐ விட 8.5% அதிகம்: ஆண்களின் கல்வியறிவு அளவு 73%, மற்றும் பெண் கல்வியறிவு அளவு 62%. தாரிகேரில், 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள். பொருளாதாரம்இந்நகரத்தில் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். வெற்றிலை, நெல், கேழ்வரகு, பாக்கு, காப்பி, தேங்காய், வாழைப்பழங்கள், வெற்றிலை, மாம்பழம், சோளம்ஆகியவை இந்த பிராந்தியத்தில் பயிரிடப்படும் முக்கிய வகை பயிர்கள். இப்பகுதி அரிசி உற்பத்தி செய்யும் முக்கிய இடமாக இருந்தது. பி.இ.எம்.எல் இன் துணை நிறுவனமான விஜியன் நிறுவனம், தரிகேருக்கு அருகில் உள்ளது . மேலும் இது எஃகு வார்ப்புகளின் முக்கிய தயாரிப்பாளராக உள்ளது. அருகிலுள்ள இடங்கள்தரிகெரே பல ஏரிகள் மற்றும் குளங்களால் சூழப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள ஏரிகளில் சிகெரே, தொட்டகெரே, தலகெரே, ராமநாயக்கநகெரே, மற்றும் கேந்திரஹல்லா ஆகியவை அடங்கும். இதனைச் சுற்றி பல வரலாற்று இடங்களும் உள்ளன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia