தாண்டலம் ஆர்சனைடு
தாண்டலம் ஆர்சனைடு (Tantalum arsenide) என்பது TaAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாண்டலம் மற்றும் ஆர்சனிக்கு தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. கோனத் தீர்வு ஒளியுமிழ்வு நிறமாலையியலால் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்பட்ட முதல் இடவியல் வெயில் அரையுலோகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[3] கட்டமைப்புa = 3.44 Å மற்றும் c = 11.65 Å ஆகிய அணிக்கோவை அளவுருக்களுடன் உடல் மையம் கொண்ட நாற்கோண அலகு செல்லில் I41md என்ற இடக்குழுவில் தாண்டலம் ஆர்சனைடு படிகமாகிறது. தயாரிப்புTaAs2 சேர்மத்தை 900 °செல்சியசு வெப்பநிலையில் சிதைப்பதன் மூலம் TaAs தயாரிக்கப்படுகிறது.[1] தனிமநிலை முன்னோடிகள் மற்றும் அயோடினை போக்குவரத்து முகவராகப் பயன்படுத்தி இரசாயன நீராவி கடத்தல் மூலம் தாண்டலம் ஆர்சனைடுகளின் பெரிய ஒற்றை படிகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.:[2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia