இலித்தியம் தாண்டலேட்டு
இலித்தியம் தாண்டலேட்டு (Lithium tantalate) என்பது LiTaO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இந்த உப்பு எதிரிணைக் காந்தப்பண்பு கொண்டதாகவும் நீரில் கரையாத பண்பையும் கொண்டுள்ளது. இலித்தியம் தாண்டலேட்டு பெரோவ்சிகைட்டு கட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. ஒளியியல் பண்புகளை கொண்டுள்ள இலித்தியம் தாண்டலேட்டு அழுத்தமின் விளைவு மற்றும் வெப்பமின் விளைவு பண்புகளையும் கொண்டிருப்பதால், நேரியல் அல்லாத ஒளியியல், செயலற்ற அகச்சிவப்பு உணரிகள் போன்ற இயக்கக் காணிகள், டெட்ரா எர்ட்சு மின்காந்த அலைகள் உருவாக்கம் மற்றும் கண்டறிதல், மேற்பரப்பு ஒலி அலை பயன்பாடுகள், கைபேசிகள் ஆகியவற்றிற்கு இச்சேர்மம் மதிப்புமிக்கதாக அமைகிறது. மேலும் இந்த சேர்மம் பற்றி வணிக ஆதாரங்களில் இருந்து கணிசமான தகவல்கள் கிடைக்கின்றன. பயன்இலித்தியம் தாண்டலேட்டு சேர்மம் அகச்சிவப்பு நிறமாலை ஒளிமானிகளில் ஒரு நிலையான கண்டறிதல் உறுப்பு ஆகும்.[2] ஓர் இலித்தியம் தாண்டலேட்டு படிகத்தைப் பயன்படுத்தி வெப்பமின் விளைவு உருகுதல் பிணைவு நிரூபிக்கப்பட்டுள்ளது. தீவிர வெப்பம் அல்லது அழுத்தம் இல்லாமல் அணுக்கரு இணைவு மூலம் ஈலியம்-3 மற்றும் நியூட்ரான்களின் ஒரு சிறிய இளக்கி உற்பத்தியின் விளைவாக இது டியூட்டீரியம் அணுக்கருக்களின் கற்றைகளை உருவாக்கி முடுக்கிவிடுவதற்கு போதுமான அளவு மின்னூட்டத்தை உருவாக்குகிறது.[3] வெப்பமின் விளைவு கொண்ட LiTaO3 படிகங்களின் நேர்மின் மற்றும் எதிர்மின் சுமைகளுக்கு இடையே நீர் உறையும் போது வேறுபாடு காணப்பட்டது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia