தாம்பரம் லலிதா
தாம்பரம் லலிதா (Tambaram Lalitha) என்று அறியப்பட்ட தாம்பரம் என். லலிதா தமிழ் நாடக, திரைப்பட நடிகை ஆவார். கதைத் தலைவியாகவும், துணைக் கதைப்பாத்திரங்களிலும் மொத்தமாக 100 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். முன் வாழ்கைதிருவரங்கம்தான் லலிதாவின் சொந்த ஊராகும். திருவரங்கம் கோபாலய்யர் காமாட்சி இணையரின் இரு மகள்களில் லலிதா இளையவர். கோபாலய்யர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்துவந்தார். கோபாலய்யர் திடீரென்று மறைந்ததால் உறவினர்களின் உதவியுடன் குடும்பம் சென்னை திருவல்லிக்கேணிக்கு குடிபெயர்ந்தது.[1] தாயாரிடம் இருந்து வாய்ப்பாட்டு கற்றுக்கொண்ட லலிதா, திருவல்லிக்கேணி சரஸ்வதி கான நிலையத்தில் நடனம் கற்றுகொண்டார். அங்கே உள்ள மாணவிகளுக்கு நடனம் கற்றுத் தரும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார். 17 வயதில் குடும்பத்தை தாங்கிப் பிடிக்க நடனக் குழுவை அமைத்து நடன நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினார். பின்னர் அதுவே நாடகக் குழுவாக மாறியது. இதனால் இவரது குடும்பத்தை இவரது சாதியினர் விலக்கி வைத்தனர். அதனால் தாம்பரத்திற்கு இடம்பெயர்ந்தனர்.[1] தொழில்இதன் பிறகு எம். ஆர். ராதா, எஸ். ஏ. நடராஜன், ஆர். எஸ். மனோகர் ஆகியோர் தங்கள் நடகங்களில் லலிதாவுக்கு வாய்ப்பளித்தனர். நடகத்திலிருந்து திரைப்படங்களிலும் நடிக்கத் துவங்கினார். முதலில் துணை வேடங்களிலும், இரண்டாவது நாயகியாகவும் நடித்தார். ஸ்ரீரங்கம் லிலிதா என்ற பெயரில் நடிக்கத் துவங்கி தாம்பரம் லலிதா என்ற பெயருக்கு மாறினார்.[1] எஸ். ஏ. நடராஜன் தயாரித்து, இயக்கிய கோகிலவாணி படத்தின் வழியாக நாயகியாக அறிமுகமானார். ஆனால் போகப்போக வாய்ப்புகள் குறைந்து, 25 வயதிலேயே அம்மா, அண்ணி, வில்லி, அபலைப் பெண் போன்ற கிடைத்த பாத்திரங்களில் நடிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகினார். டவுன் பஸ், மீண்ட சொர்க்கம், அமுதவல்லி, பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி, திலகம், சிவகெங்கைச் சீமை போன்ற படங்கள் இவரது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியவை. துரை இயக்கிய பசி, கங்கை அமரன் இயக்கிய கோழி கூவுது போன்ற படங்கள் லலிதா இறுதிக் காலத்தில் நடித்த குறிப்பிடத்தக்க படங்களாகும். குடும்பம்தன் அக்காவுக்கு திருமணம் செய்துவைத்து, அக்குடும்பத்தை காத்துவந்தார். பின்னர் எம். ஆர். ராதாவின் நாடகக் குழுவில் இருந்த கே. எம். நம்பிராஜன் என்பவரை லலிதா மணந்தார்.[2] நம்பிராஜன் நடிகர் குமரிமுத்துவின் அண்ணனாவார்.[3] ஒரு கட்டத்தில் வீட்டையும், சொத்துக்களையும் லலிதா இழந்தார். கணவரும் பிரிந்து சென்றார். அப்போது எம். ஆர். ராதா இரத்தக் கண்ணீர் நடகம் நடித்து பணம் வசூலித்து கொடுத்தார்.[1] மறைவுபுற்றுநோயால் பாதிக்கபட்ட லலிதா கவனிக்க ஆளின்றி அரசு பொது மருத்துவனையில் 1983 இல் இறந்தார்.[1] நடித்த திரைப்படங்கள் (முழுமையான பட்டியலன்று)
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia