தாராதேவி சித்தார்த்தாதி. கே. தாராதேவி சித்தார்த்தா (Taradevi Siddhartha)(பிறப்பு 1953) என்பவர் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மாநிலங்களவை 8வது மற்றும் 10வது மக்களவை உறுப்பினர்மற்றும் கர்நாடக சட்டமன்றம் உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார். ஆரம்ப கால வாழ்க்கைமுடிகெரேயைச் சேர்ந்த கிருஷ்ணப்ப கவுடாவின் மகளாக, தாராதேவி 1953ஆம் ஆண்டு திசம்பர் 26ஆம் தேதி பிறந்தார். இவர் இளங்கலை கலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.[1] பணி1978ஆம் ஆண்டில், தாராதேவி முடிகெரே வட்ட வளர்ச்சி வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிக்மகளூர் நகரத்தின் நகராட்சி மன்றத் தலைவராக ஆனார்.[1] இந்திரா காந்தி சிக்மகளூரில் தேர்தலில் நின்றபோது, தாராதேவியின் வீட்டில் தங்கினார்.[2] பின்னர், 1984ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலின் போது இந்தியத் தேசிய காங்கிரசு இவரை சிக்மகளூரில் நிறுத்தும் வரை கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 8வது மக்களவையில் தனது முதல் பதவிக்காலத்தை முடித்த பிறகு, 1990 இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாராதேவி 1991 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, புதிதாக அமைக்கப்பட்ட பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மாநில, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரானார்.[1][3] அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர் உட்பட இந்திய தேசிய காங்கிரசில் முக்கியப் பதவிகளை தாராதேவி வகித்துள்ளார்.[1] சிறிது காலம் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தார்.[3][4] தனிப்பட்ட வாழ்க்கைதாராதேவி கர்நாடகாவில் இந்தியத் தேசிய காங்கிரசின் முக்கியமான உறுப்பினரான சித்தார்த்த ரெட்டியை மணந்தார்.[1][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia