தாஷ்கந்து ஒப்பந்தம்தாஷ்கந்து ஒப்பந்தம் (Tashkent Declaration) என்பது 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாக்கித்தான் போரைத் தீர்க்க 10 ஜனவரி 1966 அன்று இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் இடையில் கையெழுத்தான ஒரு உடன்படிக்கையாகும். சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் தலையீடுகள் மூலம் செப்டம்பர் 23 அன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டு நாடுகளும் மற்ற சக்திகளை ஈர்க்கக்கூடிய எந்தவொரு விரிவாக்கத்தையும் தவிர்க்கும் முயற்சியில் இரண்டு போரிடும் நாடுகளையும் போர்நிறுத்தத்தை நோக்கி தள்ளியது.[1] [2] பின்னணிஉசுபெகிஸ்தானின் தாஷ்கந்து நகரில் 1966 ஜனவரி 4 முதல் 10 வரை சோவியத் ஒன்றியத்தால் போரில் ஈடுபட்டிருந்த இந்தியா மற்றும் பாக்கித்தானுக்கிடையே நிரந்தரமான தீர்வை உருவாக்கும் முயற்சியில் கூட்டம் நடத்தப்பட்டது. [3] சோவியத் அரசியல்வாதி அலெக்ஸி கோசிகினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சோவியத்துகள், இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாக்கித்தானின் குடியரசுத் தலைவர் அயூப் கான் ஆகியோருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் நடுநிலை வகித்தனர். [2] [4] உடன்பாடுஇந்திய இராணுவமும் பாக்கித்தானிய இராணுவமும் மோதலுக்கு முந்தைய நிலைகளுக்கு, [5] பின்வாங்கும் என்று கூறி நீடித்த அமைதிக்கான ஒரு கட்டமைப்பாக இருக்கும் என நம்பப்படும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று உள் விவகாரங்களில் தலையிடாது; பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகள் மீட்டெடுக்கப்படும்; போர்க் கைதிகள் முறையாக இடமாற்றம் செய்யப்படுவர். மேலும் இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் பணியாற்றுவார்கள். பின்விளைவுஇந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் இந்தியர்களும் பாக்கித்தானியர்களும் அந்தந்த தரப்பினருக்கு ஒப்புக் கொள்ளப்பட்டதை விட அதிக சலுகைகளை எதிர்பார்த்தனர். தாஷ்கந்த் உடன்பாட்டின்படி, 1966 மார்ச் 1 மற்றும் 2 தேதிகளில் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்தப் பேச்சுக்கள் பலனளிக்கவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும், இராஜதந்திரப் பரிமாற்றம் வசந்த காலம் மற்றும் கோடைக்காலம் முழுவதும் தொடர்ந்தது. இருப்பினும் காஷ்மீர் மோதலைப் பற்றிய தெளிவான கருத்து வேறுபாடுகள் இருதரப்பு விவாதங்களில் இருந்து ஒரு தீர்வு இல்லாத நிலையில் முடிவடைந்தது. இந்தியாவில், ஒப்பந்தம் விமர்சிக்கப்பட்டது, ஏனெனில் அது போர் இல்லாத உடன்படிக்கையையோ அல்லது காஷ்மீர் முழுவதும் கொரில்லா போரை கைவிடுவதையோ கொண்டிருக்கவில்லை. மேலும், தாஷ்கந்து உடன்பாடு கையெழுத்தான பிறகு, இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கந்தில் மர்மமான சூழ்நிலையில் இறந்தார்; [3] அவரது திடீர் மரணம் அவர் விஷம் குடித்ததாகக் கூறும் சதி கோட்பாடுகளின் ஊகத்திற்கு வழிவகுத்தது. பத்திரிகையாளரும் [6] ஹோலோகாஸ்ட் மறுப்பாளருமான [7] கிரிகோரி டக்ளஸ் 1993 இல் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி இராபர்ட் குரோலியுடன் தொடர்ச்சியான நேர்காணல்களை நடத்தியதாகக் கூறினார். டக்ளஸின் கூற்றுப்படி, இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்தின் வளர்ச்சியை முறியடிப்பதற்காக மத்திய புலனாய்வு அமைப்பு சாஸ்திரி மற்றும் இந்திய அணு விஞ்ஞானி ஓமி பாபாவை ( ஏர் இந்தியா விமானம் 101 இல் இறந்தார்) படுகொலை செய்ததாக குரோலி கூறினார்.[8] இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதாலும், நாட்டில் சீர்குலைவு மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் என்ற கூற்றின் கீழ் அவரது மரணம் குறித்த அறிக்கையை வெளியிட இந்திய அரசாங்கம் மறுத்துவிட்டது. பாக்கித்தானில், ஒப்பந்தம் பரவலான துயரத்தை ஏற்படுத்தியது; பாக்கித்தான் குடியரசுத் தலைவர் அயூப் கான் போர்நிறுத்தத்தின் பின் ஒதுங்கிச் சென்ற பிறகு, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் வெடித்ததால், சமூக வருத்தம் அதிகரித்தது.[3] இருப்பினும், கான் பின்னர் 14 ஜனவரி 1966 அன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கினார். அவர் இறுதியில் அமைதியின்மையைத் தணிக்க முடிந்தாலும், தாஷ்கந்து ஒப்பந்தம் கானின் நிலையை வெகுவாகச் சேதப்படுத்தியது. மேலும் 1969 இல் அவரது வீழ்ச்சிக்குக் காரணமான காரணிகளில் இதுவும் ஒன்றாகும். [9] மேலும் பார்க்கவும்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia