திகம்பர சாமியார்
திகம்பர சாமியார் (Thigambara Samiar) 1950 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், டி. பாலசுப்பிரமணியம், பி. வி. நரசிம்ம பாரதி ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3] திரைக்கதைகும்பகோணத்தைச் சேர்ந்த நேர்மையற்ற ஒரு வழக்கறிஞரான சட்டநாதன் வடிவாம்பாள் என்ற பெண்ணைத் தன் உதவாக்கரைத் தம்பி மாசிலாமணிக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் வடிவாம்பாள் கண்ணப்பன் என்ற அழகான இளைஞனை விரும்புகிறாள். திகம்பர சாமியார் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் சாமியார் உடையணிந்த ஒருவன் வழக்கறிஞரின் திருகுதாளங்களை அம்பலப் படுத்த முயற்சி செய்கிறான். கதையில் பல திருப்பங்கள் வருகின்றன. அவன் பல தடவைகள் தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறான். இறுதியில் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுகிறான். நடிகர்கள்
தயாரிப்புக் குழு
வரவேற்புபல்வேறு வேடங்களில் வரும் எம். என். நம்பியாரின் நடிப்புக்காகவும், பிரபலமான பாடல்களுக்காகவும் இத்திரைப்படம் நினைவில் நிறைந்திருக்கும் என திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை எழுதியுள்ளார்.[2] பாடல்கள்இத்திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள்: ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோர். பாடல்களை கா. மு. ஷெரீப், ஏ. மருதகாசி, கே. பி. காமாட்சிசுந்தரம், கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் இயற்றினர். பின்னணி பாடியோர்:கே. வி. ஜானகி, யு. ஆர். சந்திரா, கே. பி. கோமளம், டி. ஆர். கஜலட்சுமி, பி. லீலா, மாஸ்டர் சுப்பையா ஆகியோர்.[2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia