திரிச்சம்பரம் கோயில்
திரிச்சம்பரம் கோயில் (Trichambaram Temple) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கண்ணூர் மாவட்டத்தில் தளிபரம்புவில் அமைந்துள்ள ஒரு கிருஷ்ணர் கோயில் ஆகும். இங்கு தவம் செய்ததாகக் கருதப்படும் மகரிஷி ஷம்பராவுக்கு மரியாதை செலுத்தும்விதமாக இந்த கோவிலுக்கு திருஷம்பரா என்ற பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. கோயிலின் முக்கிய தெய்வம் கிருஷ்ணர், "கம்சாவதம்" க்குப் பிறகு, இரவுத்திரக் கோலத்தில் அமர்ந்திருக்கிறார். [1] இந்த கோயில் உலக புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்கு இணையாகக் கருதப்படுகிறது. மேலும் இது குருவாயூர் கோயிலின் வடக்கே அமைந்துள்ளதால் வடக்கு குருவாயூர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலை கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் சுமார் 15 கோயில்களை நிர்வகிக்கும் ஒரு முக்கிய தேவஸ்வம் வாரியமான டி.டி.கே.தேவஸ்வம் (தலிபரம்பா, த்ரிச்சம்பரம், காஞ்சிரங்காடு தேவசோம்) நிர்வகிக்கிறது. இந்த கோயில் பொ.ச. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமசுகிருத காவியமான மூஷிகவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [2] இந்தக் கோயிலின் கருவறையானது 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்களைக் கொண்டுள்ளது. கோயில் வளாகத்தில், ஒரு தொட்டியின் நடுவில் துர்க்கைக்கு அமைக்கபட்ட ஒரு சன்னதியும் உள்ளது. [3] இந்தக் கோயில் பண்டைய கேரளத்தின் 108 துர்காலயங்களில் ஒன்றாகும். கோயில் வளாகத்திற்கு அருகில் சிவன், பிள்ளையார், சாஸ்தா, விஸ்வசேணர் மற்றும் நாக தெய்வங்களுக்கான சிற்றாலயங்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு அருகில் மூன்று குளங்கள் உள்ளன. திருவிழா மற்றும் தீதாம்பு நிருதம்![]() கோயிலின் ஆண்டுத் திருவிழாவானது ( உற்சவம் ) ஒரு வண்ணமயமான நிகழ்வாகும். இந்த விழாவானது பதினைந்து நாள் திருவிழாவாக நடக்கிறது. விழாவானது ஒவ்வொரு ஆண்டும் மலையாள நாட்காட்டியின் கும்பம் 22 இல் (இது பொதுவாக மார்ச் 6 அன்று வருகிறது) கொடியெற்றத்துடன் துவங்கி, மீனம் 6 இல் (இது பொதுவாக மார்ச் 20 அன்று) கூடிப்பிரியலுடன் ( திருவிழாவின் முடிவு) நிறைவடைகிறது. இந்தத் நாட்களுக்கு இடையில், 11 நாட்களுக்கு, தீதாம்பு நிருதம் (கிருஷ்ணர் மற்றும் பலராமர் தெய்வங்களைக் கொண்ட ஒரு வகையான நடனம்) பூக்கோத் நாடாவில் என்ற இடதில் (1 திருச்சம்பரம் கோயிலிலிருந்து கி.மீ.) நடக்கிறது. மேலும் காண்ககுறிப்புகள்
https://archive.today/20131002061957/http://www.sreerajarajeswaratemple.org/ |
Portal di Ensiklopedia Dunia