திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018 (Tripura Legislative Assembly election, 2018) 18 பிப்ரவரி 2018 அன்று மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில், 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. சாரிலம் தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் 12 மார்ச் 2018 இறந்த காரணத்தினால் அத்தொகுதியின் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.[3] வாக்கு எண்ணிக்கை 3 மார்ச் 2018 அன்று துவங்கியது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று, திரிபுரா மாநிலத்தில் முதன்முறையாக அரசு அமைக்க உள்ளது.[4] பின்னணிதிரிபுரா மாநிலச் சட்டப் பேரவையின் பதவிக் காலம் 6 மார்ச் 2018ல் முடிவடைகிறது.[5]மாணிக் சர்க்கார் தலைமையிலான திரிபுரா இடதுசாரி முன்னணி அரசு, திரிபுரா மாநிலத்தை 1998 முதல் ஆட்சி செய்கிறது. தேர்தல் அட்டவணைஇந்தியத் தேர்தல் ஆணையம், திரிபுரா மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் 18 பிப்ரவரி 2018 அன்றும், வாக்கு எண்ணிக்கை 3 மார்ச் 2018 அன்றும் நடைபெறும் என அறிவித்தது.[6]
வாக்குப் பதிவில் மாற்றங்கள்திரிபுரா தேர்தலில் முதன்முறையாக, வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், மின் வாக்களிப்பு இயந்திரத்தில்,[7] வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. [8] 18 பிப்ரவரி 2018 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றத் தேர்தலில், 89.8% வாக்குகள் பதிவானது.[9] போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள்திரிபுரா சட்டமன்றத்தின் 60 தொகுதிகளுக்கு 297 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள்பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று திரிபுரா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பிப்லப் குமார் தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10][10][11][12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia