திருச்சி சாலை, கோயம்புத்தூர்
திருச்சி சாலை என்பது இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள ஒரு சாலை ஆகும். இந்த சாலையானது சிங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் சூலூர் விமான படை தளம் மற்றும் கோயம்புத்தூர் பெருநகரப் பகுதியுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு புறநகர் பகுதிகளை இணைக்கிறது. இந்தச் சாலை, அவிநாசி சாலையுடன் சேர்ந்து இந்த சாலைகளின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் கோயம்புத்தூர் நகரின் வளர்ச்சியை காட்டுவதாக உள்ளது. கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள பெரிய சாலைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. விளக்கம்இந்தச் சாலையின் மேற்கு முனையில் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. திருச்சி சாலையானது பல்லடம், தாராபுரம், கரூர், மதுரை போன்ற தமிழகத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து சாலை வழியாக நகருக்குள் நுழையும் முக்கிய நுழைவாயிலாகும். இந்த சாலை நே. நெ 81 (கோயம்புத்தூர் - சிதம்பரம் நெடுஞ்சாலை) சாலையின் ஒரு பகுதியாகும். இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பராமரிக்கப்படுகிறது. [1] இந்தச் சாலையானது நகரின் குறுக்காக 23-கிமீ தூரம் செல்கிறது. திருச்சி சாலையானது கோபாலபுரத்தில் உள்ள கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தொடங்கி, சிங்காநல்லூர், ராமநாதபுரம், ஒண்டிப்புதூர், சிந்தாமணிப்புதூர், சூலூர் மற்றும் கடைசியாக காரணம்பேட்டை வழியாகச் செல்கிறது. [2] சீரமைப்பு![]() சிந்தாமணிபுதூர் எல் அண்ட் டி புறவழிச்சாலை சந்திப்பு மற்றும் பாப்பம்பட்டி பிரிவுக்கு இடையே தவிர பெரும்பாலான பகுதிகளில் இந்த சாலை நான்கு வழிச்சாலையாக உள்ளது. [3] மேம்பாலங்கள்![]() திருச்சி சாலையில், இருகூர்-போதனூர் தொடருந்து பாதை குறுக்கிடும் பகுதியில் 2007 இல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் திறக்கப்பட்டது [4] ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்புகளை தவிர்க்க திருச்சி சாலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. [5] போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சிங்காநல்லூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் நான்கு வழி மேம்பாலம் அமைக்க திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. [6] [7] [8] பேருந்து முனையங்கள்![]() சிங்காநல்லூர் பேருந்து நிலையம் இச்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. [9] சூலூர் பேருந்து நிலையம், ஒரு புறநகர் பேருந்து முனையமாகும். திருவிழா நெரிசலைக் கையாள நகரின் தற்காலிக பேருந்து முனையமாகக் கையாளப்படுகிறது. அது இச் சாலையில் அமைந்துள்ளது.. [10] விமானப்படை நிலையம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia