சூலூர்
சூலூர் (ஆங்கிலம்:Sulur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்இது கோவை - திருச்சி நெடுஞ்சாலையில், கோயம்புத்தூருக்கு கிழக்கில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு10.96 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 மக்கள்தொகையும் கொண்டது.[2] பழம்பெயர்சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது.[3] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 மீட்டர் (1115 அடி) உயரத்தில் இருக்கின்றது. நொய்யல் ஆறு இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia