திருத்தணி (திரைப்படம்)
திருத்தணி 2012ஆம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பரத், சுனைனா, ராஜ்கிரண், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர்.[2] இப்படத்தை இயக்கிய பேரரசுவே இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நடிகர்கள்
பாடல்கள்இயக்குநர் பேரரசு இப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருந்தார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை கமலா திரையரங்கில் ஆகஸ்டு 20 அன்று நடைபெற்றது. எஸ். ஜே. சூர்யா, ஏ. ஆர். முருகதாஸ், பாக்யராஜ், பாண்டியராஜன், எஸ். ஏ. சந்திரசேகர், மோகன் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, பி. எல். தேனப்பன், தனஞ்செயன் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள பல புகழ்பெற்ற நபர்கள் முன்னிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.[3] இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன.
வெளியீடுபடத்தின் செயற்கைக்கோள் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியது. இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு இப்படத்திற்கு "யூ" சான்றிதழ் அளித்தது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia