திருப்பதி (திரைப்படம்)

திருப்பதி
இயக்கம்பேரரசு
தயாரிப்புஎம். எஸ். குகன்
எம்.சரவணன்
இசைபரத்வாஜ்
நடிப்புஅஜித் குமார்
சதா
பிரமிட் நடராஜன்
ஹரிஷ் ராகவேந்திரா
ரியாஸ்கான்
பேரரசு
படத்தொகுப்புஅந்தோனி
வெளியீடுஏப்ரல் 14, 2006
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

திருப்பதி (Thirupathi) பேரரசுவின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் அஜித்குமார் கதாநாயகனாகவும் சதா கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத்வாஜின் இசையுடன் இத்திரைப்படம் வெளியானது.

வகை

மசாலாப்படம்

நடிகர்கள்

திரைக்கதை

‘திருப்பதி’ சவுண்ட் சர்வீஸ் ஓனர் அஜீத்தும், அமைச்சர் மகன் ரியாஸ் கானும் நண்பர்கள். ரியாஸ்கான் கைகாட்டும் வேலைகளை நட்புக்காக கண்மூடித்தனமாகச் செய்து முடிப் பவர் அஜீத். தன் தங்கையின் பிரசவத் துக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது கூட நண்பன் கூப்பிடுகிறான் என்று அவருடன் செல்கிறார். பிரசவத்துக்குச் சென்ற அஜீத்தின் தங்கை, டாக்டரின் பணத்தாசையால் சிசேரியன் செய்யப்பட்டு, உயிரிழக்கிறார். உண்மை தெரிந்து அஜித் குமார் ஆவேசமாக டாக்டரைக் கொல்லப் போனால், அவர் ரியாஸ்கானின் அண்ணன்.

தன் அண்ணனைக் கொல்ல வரும் அஜீத்தை அடித்து, ‘டேய்! நீ என் ஃப்ரெண்ட் இல்லை. வெறும் அடியாளுதான்!’ என ரியாஸ்கான் நிஜ முகம் காட்ட, வெகுண்டு எழுகிறார் ஹீரோ. ‘பணத்தாசை பிடிச்ச உன் அண்ணனை உன் கையாலேயே கொல்ல வெச்சு, உன்னையும் கொல்வேன்’ என்று சபதம் போடுகிறார். கூடவே, பணத்தாசை பிடித்த டாக்டர்களைத் திருத்தி, ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறார். சபதத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் இறுதிக் காட்சியாகும்.

பாடல்கள்

மார்ச் 15, 2006 அன்று வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம் (நி:நொ)
1 ஆத்தாடி ஆத்தாடி கே. கே. மாதங்கி 5:01
2 திருப்பதி வந்தா சங்கர் மகாதேவன் 4:46
3 கீரை விதைப்போம் புஷ்பவனம் குப்புசாமி 5:13
4 எனையே எனக்கு விஜய் யேசுதாஸ் 3:55
5 செல்லவும் முடியல ஹரிஷ் ராகவேந்திரா, சுவர்ணலதா 5:20
6 புதுவீடு கட்டலாமா அனுராதா ஸ்ரீராம் 5:04

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ஓவர் ஹீரோயிஸமும், பக்கா கமர்ஷியலும்தான் தன்னுடைய ஹிட் ஃபார்முலா என்பது டைரக்டர் பேரரசுவின் நம்பிக்கை. தேவை ஓர் உடனடி வெற்றி என்பது அஜீத்தின் ஏக்கம். ம்ஹூம்... ஓவர் சத்தம், ஓவர் மசாலா! லட்டு இனிக்காமல் உறைகிறது!" என்று எழுதி 38/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

மேற்கோள்கள்

  1. http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/9312.html
  2. "சினிமா விமர்சனம்: திருப்பதி". விகடன். 2006-04-30. Retrieved 2025-05-22.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya