எல். இராஜா
எல். ராஜா (L. Raja) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றுகிறார். தொழில்ராஜா இயக்குநர் ராஜசேகரின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] ஏ. வி. எம் நிறுவனம் 1987 ஆம் ஆண்டில் தயாரித்த சங்கர் குரு படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.[2] இவர் ஒன்பது படங்களில் இயக்குநராகப் பணியாற்றினார், அதில் ஆறு படங்கள் அர்ஜுன் நடித்தவை. சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ராஜா நடித்தார். இது இவரது நடிப்புக்கான அறிமுகமாக ஆனது. அதன்பின்னர் இவர் நாடோடிகள் உட்பட 35 படங்களில் நடித்துள்ளார். அப்படத்தில் இவர் சசிகுமாரின் தந்தையாக நடித்தார். ரகுவம்சம் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமான இவர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். பின்னர் இவர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். மேலும் ராடான் மீடியாவொர்க்சிற்காக இதி கத காது மற்றும் நின்னு பெல்லாதுதா ஆகிய இரண்டு தொடர்களை இயக்கினார்.[1] ஏ.வி.எம் புரொடக்சன்சின் மௌன நடன நாடகமான ஹிம்சவேதத்தை இயக்கினார்.[2] தனிப்பட்ட வாழ்க்கைஇவர் நடிகை ஈஸ்வரி ராவை திருமணம் செய்து கொண்டார்.[3] திரைப்படவியல்இயக்குநராக
நடிகராகபடங்கள்
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia