திலகபாமா
திலகபாமா என்பவர் ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் ஆவார்.[1] பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளராக பொறுப்பு வகித்து வருகின்றார்.[2] பாரதி இலக்கிய சங்கம் அமைத்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார். சிவகாசியில் உள்ள மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் என்கிற பெயரில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பட்டிவீரன் பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியனார் பற்றி எழுதிய வரலாற்று நூல் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். பிறப்புதிலகபாமா திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்தார். அவ்வூரிலேயே பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், மதுரை பாத்திமா கல்லூரியில், வணிகவியல் படித்தார். இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே, கவிதைகளை எழுதத் தொடங்கினார். இவர் தற்போது சிவகாசியில் வசித்து வருகிறார். வெளியான நூல்கள்கவிதை தொகுப்புகள்
சிறுகதை தொகுப்புகள்
புதினம்
கட்டுரைத் தொகுப்புகள்
சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்திலகபாமா, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார்.[3]. இத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் இ. பெரியசாமி வெற்றி பெற்றார்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia