தி சிக்சு டிரிபிள் எய்ட்டு
தி சிக்சு டிரிபிள் எய்ட்டு (The Six Triple Eight) என்பது டைலர் பெர்ரி என்ற இயக்குநர், உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதி இயக்கிய, இரண்டாம் உலகப் போர் குறித்த திரைப்படம் ஆகும். 6888வது மத்திய அஞ்சல் டைரக்டரி பட்டாலியன்(6888th Central Postal Directory Battalion) என்பது இரண்டாம் உலகப்போரில் அமைக்கப்பட்ட பெண்கள் மட்டுமே பணியாற்றி படையணி ஆகும். இது முழுமையாக கறுப்பினப் பெண்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தது. இத்திரைப்படம், 2024 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 6 ஆம் நாளில் வெளியான, அமெரிக்க, போர், நாடகத் திரைப்படமாகும்.[3] இது கெவின் எம். ஹைமல் எழுதிய "இரண்டு-முன்னணி போரை எதிர்த்துப் போராடுதல்" (Fighting a Two-Front War) என்ற கட்டுரையையும் அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் கெர்ரி வாசிங்டன், எபோனி அப்சிடியன், மிலானா சாக்சன், சானிஸ் சாண்டே, ஓப்ரா வின்ஃப்ரே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கதைக்கருமேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்த இரு மகன்களின் தாய், வெளிநாட்டில் படையணியில் பணியாற்றும் தனது இரண்டு மகன்களிடமிருந்து வரும் செய்திகளுக்காக தினமும் காத்திருக்கிறார். முறையான செய்தி கிடைக்காததால், கொட்டும் மழையில் அமெரிக்க சனாதிபதியின் இல்ல வாசலில் பல மணி நேரம் நிற்கிறார். இதனால் சனாதிபதியின் மனைவி, அவரைச் சந்தித்து உரையாடும் போது, நாட்டுக்காகப் பணியாற்றும் குடும்பத்தினர் தவிப்பை உணருகிறார். எனவே, அதற்குரிய செயல்களை முடுக்குகிறார். இதற்கிடையில், 1940களில் பிலடெல்பியாவில், குழந்தைப்பருவ நண்பர்களா இலீனா(கருப்பினத்தவர்) என்ற பெண்ணும், ஆப்ராமும்(யூதர்) தங்கள் காதலால், சமூகத்தினரின் எதிர்ப்பையும், அதனால் சிரமத்தையும் எதிர்கொள்கிறார்கள். இச்சூழலில், ஆப்ராமும் படையணிக்குச் செல்கிறார். போர் விமானியாகச் சென்ற காதலன் ஆப்ராம் போரில் கொல்லப்பட்ட பிறகு, மனம் உடைந்த இலீனா பட்டப்படிப்பு முடிந்ததும், படையணியில் சேர உறுதியெடுக்கிறாள். அப்படி அவள் சேரும் பெண்படை அணியின் பெயர் 6888(6888th Central Postal Directory Battalion) ஆகும். அப்பெண்கள் படையணி, உடன்பணியாற்றும் பிற ஆண் படையணிகளாலும் ஏளனப்படுத்தப்படுகின்றனர். மேலும், அக்குறிப்பிட்ட இடத்தின் படையணித் தலைவராலும் மரியாதைக் குறைவாக நடத்தப்படுகின்றனர். போர் காரணமாக வாழிடங்களை விட்டு, பல்வேறு இடங்களுக்கு போர் வீரர்கள் இடம் பெயர்கின்றனர். அப்பொழுது அவர்கள் தம் குடும்பத்தாருக்கு எழுதும் கடிதங்களும், அவரவர் குடும்பத்தார் எழுதும் கடிதங்களும் உரியவர்களை அடையாமல் குவிந்தும், கேட்பார் அற்றும் கிடக்கின்றன. பல்லாயிர கணக்கான கடிதங்களைத் தரம் பிரிக்கும் போது ஏற்படும் சிக்கலும், அதற்குரிய தீர்வுகளும், இப்பணிகளைச் செய்ய அவர்களுக்குரிய அலுவல் கட்டித்தையும் இம்மகளிர் படையணியே உருவாக்குகிறது. சுழற்சி முறையில் பணியாற்றி, பல்வேறு இடர்களுக்கு இடையில், உரிய கடிதங்களை, கடிதக் குவியல்களில் இருந்து எடுத்து, உரியவரிடம் சேர்க்கின்றனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்த பல்லாயிரகணக்கான போர் வீரர்களும், அவர்தம் குடும்பத்தாரும் மனமகிழ்ச்சி அடைந்து மனவெழுச்சியும், புத்துணர்ச்சியும் பெறுகின்றனர். இதுவே படையின் முதன்மை கருவாகும். படத்தின் இறுதியில் உண்மையான மகளிர் படையணியின் நிகழ்படங்களையும், சில நிழற்படங்களையும், இந்த படையணியின் சில பெண்களையும் காட்டி படத்தினை முடிக்கின்றனர். பாராட்டு![]() இப்பெண்கள் படையணி அமெரிக்க மண்ணுக்குத் திரும்பியபோது, பெரும்பாலானோரால் பாராட்டப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 6888வது மத்திய அஞ்சல் டைரக்டரி பட்டாலியனை விழா ஒன்றில், 44வது குடியரசுத் தலைவரான பராக் ஒபாமாவின் மனைவியான மைக்கேல் ஒபாமா மேற்பார்வையிடுகிறார். அந்நிகழ்வில் இப்படையணினர் பாராட்டப் படுகின்றனர். மேலும், அமெரிக்கக் கடற்படைதளமான லீ (Fort Lee), ஆடம்சினைப் போற்றும் வகையில், போஃர்ட் கிரெக்-ஆடம்சு (Fort Gregg-Adams) என்று மறுபெயரிடப்பட்டது. நடித்தவர்கள்
காட்சியகம்
படத் தயாரிப்புஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 17 சனவரி 2023 அன்று அட்லாண்டாவில் தொடங்கியது.[4] இலிட்டில் ஜெர்மனி, பிராட்போர்டு மற்றும் இம்பீரியல் வார் மியூசியம் டக்ஸ்ஃபோர்டிலும் பெப்பிவரி மாதம் தயாரிப்புப் பணிகளும் நடந்த. மேலும், படப்பிடிப்பு ஜார்ஜியாவின் செடார்டவுனில் மார்ச்சு 28, 2023 அன்று நடந்தது.[5] 6888 படமானது, 70 மில்லியன் அமெரிக்க டாலர் பணச்செலவில் எடுக்கப்பட்டது. இது அமெரிக்கத் திரைப்பட வரலாற்றிலும், அதன் இயக்குநர் வரலாற்றிலும் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பாகவும் திகழ்கிறது.[6] வெளியீடுபிப்ரவரி 2024 இல், சிக்ஸ் டிரிபிள் எய்ட் நெட்ஃபிக்ஸ் 2024 வெளியீட்டு காலெண்டரின் ஒரு பகுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.[7][8][9] ஆகஸ்ட் 2024 இல், நெட்ஃபிக்ஸ் இப்போது தி சிக்ஸ் டிரிபிள் எய்ட் என்று பெயரிடப்பட்ட இந்த படம் டிசம்பர் 6,2024 அன்று வரையறுக்கப்பட்ட திரையரங்க வெளியீட்டில் வெளியிடப்படும் என்று அறிவித்தது, இரண்டு வாரங்களுக்குப் பிறகு டிசம்பர் 20 அன்று நெட்ஃபிக்ஸில் ஸ்ட்ரீமிங் வெளியீடு.[10] பாராட்டுகள்
மேற்கோள்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia