தீபா மாஞ்சி
தீபா குமாரி (Deepa Manjhi)(பிறப்பு 1980) தீபா மாஞ்சி என்று பிரபலமாக அறியப்பட்டவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நவம்பர் 23, 2023 முதல் இமாம்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். ஜீதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துசுதானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] இமாம்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் வேட்பாளர் இவர்தான். இவர் ஜிதன் ராம் மஞ்சியின் மருமகளும் சந்தோசு குமார் சுமனின் மனைவியும் ஆவார்.[2] அரசியல்2024ஆம் ஆண்டு இமாம்கஞ்ச் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தீபா தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் உள்ள ஒரு கட்சியான இந்துசுதானி அவாம் மோர்ச்சாவின் சின்னத்தில் போட்டியிட்டார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் ரௌஷன் குமார் மாஞ்சியையும் ஜன் சூராஜ் கட்சியின் ஜிதேந்திர பாசுவானையும் தோற்கடித்தார். தீபா மஞ்சி 53435, ரௌஷன் குமார் மாஞ்சி 47490, ஜிதேந்திர பாசுவான் 37103 வாக்குகள் பெற்றனர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia