துசார் தேஷ்பாண்டே
துஷார் தேஷ்பாண்டே (பிறப்பு 15 மே 1995) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர். [1] அவர் 6 அக்டோபர் 2016 அன்று 2016-17 ரஞ்சிக் கோப்பையில் மும்பைக்காக விளையாடியதன் மூலம் முதல்-தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [2] அவர் 19 செப்டம்பர் 2018 அன்று 2018-19 விஜய் ஹசாரே கோப்பையில் மும்பைக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார் [3] அவர் 14 அக்டோபர் 2018 அன்று நடந்த போட்டியின் காலிறுதிப் போட்டியில் பட்டியல் அ துடுப்பாட்டத்தில் தனது முதல் ஐந்து இலக்குகளை எடுத்தார் [4] அடுத்த மாதம், 2018-19இல் ரஞ்சிக் கோப்பையில் கவனிக்க வேண்டிய எட்டு வீரர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். [5] ஆகஸ்ட் 2019 இல், அவர் 2019-20 துலீப் கோப்பைக்கான இந்தியா நீல அணியில் இடம் பெற்றார். [6] [7] 2020 ஐபிஎல் ஏலத்தில், 2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸால் வாங்கப்பட்டார். [8] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸால் வாங்கப்பட்டார். [9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia