துட்டு![]() துட்டு (Duit, பன்மை: duiten ; ஆங்கிலம்: doit[1] ) என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும்.[2] 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில்[3] இடச்சுக் குடியரசின் பிரதேசங்களில் புழக்கத்துக்கு வந்து, ஒரு சர்வதேச நாணயமாக மாறியது.[4][5] இதன் மதிப்பு 1/8 ஸ்டூவர் ஆகும். [4] சொற்பிறப்பியல்சொற்பிறப்பியல் ரீதியாக, துட்டு என்ற சொல் மத்திய டச்சு மொழியிலிருந்து வந்தது. மேலும் இது ஒரு வகை சிறிய நாணயத்தைக் குறிக்கிறது.[1] வரலாறு![]() கடத்தலைத் தடுக்கும் பொருட்டு இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (VOC) பொறிப்பெழுத்து பொறிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயம் முதன்முதலில் 17-ஆம் நூற்றாண்டில் இடச்சு குடியரசில் அச்சிடப்பட்டது, மேலும் 1816-ஆம் ஆண்டு வரை நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது, பின்னர் அது செண்டு, ½ செண்டுகளால் மாற்றப்பட்டது. பின்னர் இது பன்னாட்டு நாணயமாக மாறியது. இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள், டச்சு சிலோன், டச்சு மலபார் ஆகிய நாடுகளிலும் வெளியிடப்பட்டது. [5] காலனித்துவ ஆட்சியின் போது இந்தோனேசியாவில் இவ்வகையான நாணயங்கள் மட்டுமே செல்லுபடியாகுவதாக இருந்தது. துட்டு நாணயங்களுக்கான மிகப்பெரிய இலக்கு சாவகம் ஆகும். [5] இடச்சு ஆட்சியின் கீழ் இருந்தபோது நியூ ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயார்க் நகரம்), சுரினாம் போன்ற அமெரிக்காவின் சில பகுதிகளிலும் துட்டு பயன்படுத்தப்பட்டது; ஆப்பிரிக்காவில் டச்சு கேப் காலனியிலும் பயன்படுத்தப்பட்டது.[4] மதிப்புநெதர்லாந்தில் பயன்பாட்டின்படி, 8 துட்டுகள் ஒரு ஸ்டூவருக்குச் சமம் மற்றும் 160 துட்டுகள் ஒரு கில்டருக்குச் சமம். 1726 ஆம் ஆண்டு இடச்சு கிழக்கு இந்திய காலனியில் இந்த நாணயம் பயன்படுத்தப்பட்டபோது, அது ஒரு ஸ்டூவரின் கால் பங்கிற்குச் சமமாக இருந்தது (அதாவது 4 துட்டு = 1 ஸ்டூயிவர்). துவக்கத்தில் துட்டு நாணயங்கள் தாமிரத்தில் அச்சிடப்பட்டன, ஆனால் துட்டின் மாதிரி நாணயங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் அச்சிடப்பட்டன.[6] தமிழில்டச்சு இந்தியாவிலும் துட்டு பயன்படுத்தப்பட்டது, இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக்] குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia