துணை முதல்வர் (திரைப்படம்)
துணை முதல்வர் (Thunai Mudhalvar) என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அரசியல் நையாண்டித் திரைப்படம் ஆகும். பாக்யராஜ் எழுதி ஆர். விவேகானந்தன் இயக்கிய இப்படத்தில் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுவேதா மேனன், பாக்யராஜ், சந்தியா உள்ளிட்டோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசை நான்கு வெவ்வேறு இசை அமைப்பாளர்களால் அமைக்கப்பட்டது. படம் ஏப்ரல் 2015 இல் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.[1][2] நடிகர்கள்
தயாரிப்பு2013 சனவரியில் பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தின் (2013) இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, பாக்கியராஜ், துணை முதல்வர் என்ற படத்தின் திரைக்கதைப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அறிவித்தார்.[3] இந்த படத்தின் பணிகள் 2013 திசம்பரில் தொடங்கப்பட்டது, ஜெயராம் பாக்யராஜுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் அறிமுக இயக்குநர் விவேகானந்தன் படத்தை இயக்கினார். சுவேதா மேனன் தமிழ் திரைப்படத் துறையில் அவரது நான்காவது திரைப்படமான இதில், ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் மீனாட்சியும் ஒப்பந்தம் செய்யபட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பானது பொள்ளாச்சியில் தொடங்கியது.[4] பாக்யராஜ் பெரும்பாலும் படத்தின் திரைக்கதை, வசனங்களை படப்பிப்பு காலத்திலேயே மாற்றுபவர்.[5] மீனாட்சி பின்னர் இந்த படத்திலிருந்து விலகினார், அவருக்கு பதிலாக இந்த படத்தில் ஜெயராமின் மனைவியாக நடிக்க சந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[6] இசைஇப்படத்திற்கு ஜெய்; பாலாஜி; பிரதீப்ஹரிஷ்-ஜெய் ஆகியோர் இசையமைத்தனர்.
வெளியீடுஇந்த படம் ஏப்ரல் 2015 இல் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு விமர்சகர் "முழு படமும் மோசமாக தயாரிக்கப்பட்ட சில தொலைக்காட்சி தொடர்களைப் போல உணர வைக்கிறது" என்று குறிப்பிட்டார், குறிப்பாக படத்தின் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதத்தை விமர்சித்தார்.[7] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia