துரை சந்திரசேகரன்
துரை சந்திரசேகரன் (Durai Chandrasekaran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் 1989 சட்டமன்றத் தேர்தல்,[1] 1996 சட்டமன்றத் தேர்தல்,[2] 2006 சட்டமன்றத் தேர்தல்,[3] 2016 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்[4] ஆகிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். துரை சந்திரசேகரன் 1991 சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட்ட அதிமுகவை சார்ந்த பி. கலியபெருமாளிடம் தோல்வியடைந்தார். இதன் பிறகு 2001 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வேட்பாளர் அய்யாறு வாண்டையாரிடம் தோல்வியடைந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி மீது மக்களிடையே ஏற்பட்டிருந்த கடுமையான அதிருப்தியால் அத்தேர்தலில் திமுக சார்பில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி இவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தும் போட்டியிடாமல் விலகினார். அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து திமுக சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[5] அதனுடன் சேர்த்து துரை சந்திரசேகரன் தற்போது தஞ்சாவூர் மாவட்ட தெற்கு பகுதி தி.மு.க. செயலாளராக உள்ளார். சட்டமன்ற உறுப்பினராக
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia