துல்லா பட்டி
அப்துல்லா பட்டி (Abdullah Bhatti) என்ற இயற்பெயருடைய துல்லா பட்டி (Dulla Bhatti அல்லது Dullah Bhatti) புகழ்பெற்ற பஞ்சாபிய நாட்டுப்புற நாயகனும் பேரரசர் அக்பர் ஆட்சியில் முகலாயருக்கு எதிராகப் போராடிய விடுதலை வீரரும் ஆவார். இவர் பஞ்சாபின் மைந்தர் என்றும் பஞ்சாபின் இராபின் ஊட் என்றும் பரவலாக்க் குறிப்பிடப்படுகின்றார். இவர் 1599இல் மரணமடைந்தார்.[1] வாழ்க்கைதுல்லா பட்டி ராஜ்புத் முஸ்லிம் பட்டி இனத்தைச் சேர்ந்தவர்; ஊரக விவசாயி அல்லது நிலக்கிழாராக இருந்தார்.[2] இளைஞராக, உள்ளூர் பஞ்சாபிகளுக்கு மொகலாய அரசினர் இழைத்த அநீதியைக் கண்டு பொங்கி எழுந்து அவர்களுக்கு எதிராக மாறினார். மொகலாயர்களுக்கு எதிராக கரந்தடிப் போர் முறையில் போரிட்டு 10, 12 ஆண்டுகளுக்கு வெற்றியும் பெற்று வந்தார்.[3] இருப்பினும் சிலர் காட்டிக் கொடுத்தமையால் மொகலாயர்களிடம் இறுதியில் தோல்வியடைந்தார்.[4] லாகூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். 1599இல் அங்கு தூக்கிலிடப்பட்டார்.[5] பரவல் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் இடம் பெற்றமை
மேற்சான்றுகள் |
Portal di Ensiklopedia Dunia