துளசி நாயர்
துளசி நாயர் (பிறப்பு: 25 அக்டோபர் 1997) ஒரு தமிழ் திரைப்பட நடிகை. இவர் பிரபல நடிகை ராதாவின் மகள். 2013ஆம் ஆண்டு இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு ரவி கே. சந்திரன் இயக்கிய யான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரை வாழ்க்கைஇவர் தனது 14ஆவது வயதில் இயக்குநர் மணி ரத்னம் இயக்கிய கடல் (2013) என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும் அறிமுகமானார். இவர்களுடன் அர்ஜுன், அரவிந்த் சாமி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நடிகர் தேர்வின் போது மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி துளசியை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.[1] இத்திரைப்படத்திற்காக 12 கிலோ உடல் குறைப்பு செய்ததுடன், நடிகையும் நடிப்பு இயக்குநருமான கலைராணியிடம் நடிப்புப்பயிற்சியும் மேற்கொண்டார்.[2] இத்திரைப்படத்தில் துளசி நடித்த ஓர் முத்தக்காட்சி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.[3] அதன் பின்னர், 2014ஆம் ஆண்டு ரவி கே. சந்திரன் இயக்கிய யான் என்ற திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், படம் எதிர்பாறாத தோல்வியை சந்தித்தது[4]. நடித்த திரைப்படங்கள்
தனி வாழ்க்கைதுளசி 25 அக்டோபர் 1997ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிரபல நடிகை ராதா மற்றும் தொழில் அதிபர் ராஜசேகரன் நாயரின் இளைய மகள். இவரது மூத்த சகோதரி கார்த்திகா நாயர். இவரும் ஓர் நடிகை. இவர்களுக்கு விக்னேஷ் நாயர் எனும் ஒரு சகோதரரும் உண்டு. யான் திரைப்படத்தின் தோல்விக்குப்பிறகு படிப்பில் கவனம் செலுத்துவதா அல்லது நடிப்பை தொடர்வதா என்ற குழப்பத்தில் இருந்து முடிவாக போதார் சர்வதேச பள்ளியில் (மும்பை) படிப்பை தொடர்ந்தார் [5]. அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து முற்றிலுமாக விலகிக்கொண்டார். தனது இளங்கலை கல்வியை லண்டனில் உள்ள ரஸல் சர்வதேச சதுக்கம் என்கிற கல்வி நிறுவனத்தில் வணிக மேலாண்மை பயின்றார். அதைத்தொடர்ந்து லண்டலின் உள்ள கிங் கல்லூரியில் வணிக மேலாண்மை குறித்த முதுகலை பட்டத்தை 2020ஆம் ஆண்டு பெற்றார். [6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia