தூகி மாவட்டம்

தூகி மாவட்டம்
ضلع دوکی
دوکي ولسوالۍ
மாவட்டம்
ஹைராஐதர்ஜாய் குன்று
ஹைராஐதர்ஜாய் குன்று
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம்
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம் பலூசிஸ்தான்
கோட்டம்லோராலை
நிறுவிய ஆண்டு2016
தலைமையிடம்தூகி
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி - துணை ஆணையாளர்)
பரப்பளவு
 • மாவட்டம்4,233 km2 (1,634 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 • மாவட்டம்2,05,044
 • அடர்த்தி48/km2 (130/sq mi)
 • நகர்ப்புறம்
9,783
 • நாட்டுப்புறம்
1,95,261
சராசரி எழுத்தறிவு
 • எழுத்தறிவு
  • மொத்தம்:
    (44.18%)
  • ஆண்:
    (53.91%)
  • பெண்:
    (33.43%)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)

தூகி மாவட்டம் (Duki district), பாக்கித்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் தூகி நகரம் ஆகும். தூகி நகரம் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு கிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 834 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்

தூகி மாவட்டத்திற்கு வடக்கில் மூசாக்கேல் மாவட்டம், கிழக்கே பார்கான் மாவட்டம், தெற்கே கோலு மாவட்டம் மற்றும் மேற்கே லோராலை மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[3]

மக்கள் தொகை

(2023)

மக்கள் தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[4]

ஒன்றியக் குழுக்கள்
தூகி வட்டம் 938 137,294 146.37 50.48% ...
லூனி வட்டம் 553 13,615 24.62 33.80% ...
தலலோ வட்டம் 1,697 21,930 12.92 21.41% ...
தால் சுத்தியாலி வட்டம் 1,045 32,205 30.82 38.10% ...

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 43,059 குடியிருப்புகள் கொண்ட தூகி மாவட்ட மக்கள் தொகை 2,05,044 ஆகும் . பாலின விகிதம் 100 பெண்களுக்கு 109.66 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 44.18% ஆகும்.[5][6]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 67,333 (32.84%) ஆக உள்ளனர்.[7]நகர்புறங்களில் 9,783 (4.77%) மக்கள் வாழ்கின்றனர்.[5]

சமயங்கள்

தூகி மாவட்டத்தில் இசுலாம் 98.04%, இந்து சமயம் 1.82%, கிறித்தவம் 0.13% மற்றும் பிற சமயங்கள் 0.01% பின்பற்றுகின்றனர்.

மொழிகள்

தூகி மாவட்டத்தில் பஷ்தூ மொழியை 93.27%, பலூச்சி மொழியை 4.85% மற்றும் பிற மொழிகளை 1.19% மக்களும் பேசுகின்றனர்.[8]

மேற்கோள்கள்

  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  2. Tehsils & Unions in the District of Loralai - Government பரணிடப்பட்டது மார்ச் 26, 2012 at the வந்தவழி இயந்திரம்
  3. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  4. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  5. 5.0 5.1 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics].
  8. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya