தென்றல் வந்து என்னைத் தொடும் (தொலைக்காட்சித் தொடர்)
தென்றல் வந்து என்னைத் தொடும் என்பது 16 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இது ஸ்டார் ஜல்சா என்ற வங்காள மொழித் தொடரான 'கெலகோர்' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரை 'சொல் புரோடக்சன்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் 'ஆர்.ராஜேஷ்' என்பவர் தயாரிக்க, 'வி.அருணாசலம்' என்பவர் இயக்ககத்தில் வினோத் பாபு[3] மற்றும் பவித்ரா ஜனனி[4] ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 11 நவம்பர் 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு, 686 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[5] கதை சுருக்கம்இந்த தொடரில் அமெரிக்காவில் படித்து விட்டு வந்த அபிநயாவிற்கு திடீரென தாலி கட்டி அதிர்ச்சி கொடுக்கிறார் வெற்றி அதன் பிறகு என்ன நடக்க போகிறது என்பது தான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் கதாநாயகியாக ஈரமான ரோஜாவே என்ற தொடரில் மலராக நடித்து பிரபலமான பவித்ரா ஜனனி நடிக்கிறார். இவர் கதாநாயகியாக நடிக்கும் இரண்டாவது தொடர் இது ஆகும். இவருக்கு ஜோடியாக நகைச்சுவையாளர் மற்றும் நடிகர் வினோத் பாபு நடிக்கிறார். வினோத் பாபு ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார். அதை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடரான சிவகாமி (2018) மற்றும் விஜய் தொலைக்காட்சி தொடரான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் (2019-2021) போன்ற தொடர்களில் நடித்துள்ளார். சர்ச்சைஇந்த தொடரின் முன்னோட்ட காட்சியில்
இந்த காட்சியை பார்த்த பல பெண்ணியவாதிகள் மட்டுமின்றி பரவலாக அனைத்து தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.[6][7] இந்த விளம்பர காணொளி காட்டப்படும் காட்சிகள், சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று, திருவள்ளூர் காவல் அதிகாரி எஸ்பி 'வருண் குமார்' ஐபிஎஸ், தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.[8][9][10][11] சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia