தெள்ளாறு
தெள்ளாறு (Thellaru) தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இந்த ஊரில் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு செயல்படுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 7359 பேர் வசிக்கின்றனர். இந்த ஊர் வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். அமைவிடம்இந்த ஊர் புதுச்சேரி - திண்டிவனம் - வந்தவாசி - ஆரணி - வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டிவனம் - ஆற்காடு மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி மாவட்ட தலைநகரான திருவண்ணாமலையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், ஆரணியிலிருந்து 57 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 26கி.மீ. தொலைவிலும் மற்றும் மாநில தலைமையிடமான சென்னையிலிருந்து 136கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia