தேசிய நெடுஞ்சாலை 112 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 112 (National Highway 112 -India) என்பது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1] இது பராசத்திலிருந்து வங்காளதேசத்தின் எல்லையான பெட்ராபோல் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை (தெ. நெ. 112) முன்பு தெ. நெ. 35 எனக் குறிக்கப்பட்டது. கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தை இணைக்கும் மிக முக்கியமான இணைப்புகளில் இதுவும் ஒன்றாகும். இது வடக்கு கொல்கத்தாவில் உள்ள சியம்பஜாரில் இருந்து வங்காளதேசத்தில் உள்ள ஜெசோர் வரை செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெஸ்ஸூர் சாலையின் ஒரு பகுதியாகும். தே. நெ. 112 தேசிய நெடுஞ்சாலை 12லிருந்து பராசத் டக்பங்லோ மோர்ஹில் இருந்து தொடங்கி வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைக் கடந்து பங்கானுக்கு அருகிலுள்ள பெட்ராபோலில் முடிவடைகிறது. இதன் கிழக்கு நோக்கிய தொடர்ச்சி, N706 வங்காளதேசத்தில் உள்ள ஜெஸ்சூட் மாவட்டம் வரை நீண்டுள்ளது. தே. நெ. 112-ல் உள்ள நகரங்கள்
சந்திப்புகள்
ஜப்பானின் தோக்கியோவில் தொடங்கி துருக்கியின் இசுதான்புல்லில் முடிவடையும் ஆசிய நெடுஞ்சாலை 1இன் திட்டமிடப்பட்ட நெடுஞ்சாலை வலையமைப்பின் ஒரு பகுதியாகவும் இந்த நெடுஞ்சாலை உள்ளது. மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia