தேவதை சதுரங்கக் காய் (Fairy chess piece) அல்லது மரபுவழியல்லாத சதுரங்கக் காய் (Unorthodox chess piece) என்பது வழமையான சதுரங்கத்தில் பயன்படுத்தப்படாத, ஆனால், சதுரங்க மாறுபாடுகளிலோ சதுரங்கப் புதிர்களிலோ பயன்படுத்தப்படும் சதுரங்கக் காய் ஆகும்.[1] தேவதை சதுரங்கக் காய்களின் நகர்வு முறைகள் வேறுபட்டவை.[2]
வகைப்பாடு
நகர்வு வகை
தாண்டிகள்
(m,n)-தாண்டி (Leaper) என்பது தொடக்கக் கட்டத்திலிருந்து (m,n) என்னும் காவி வழியே தாண்டிச்சென்று நகரும் காய் ஆகும்.[3] மரபுவழிச் சதுரங்கக் காயான குதிரை, (1,2)-தாண்டி ஆகும்.[4]
சில தாண்டிகளின் பெற்சா குறிமுறை கீழே வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டி (Rider) என்பது, அது செல்லும் வழிக்குக் குறுக்கே வேறெந்தக் காயும் இல்லாதவிடத்து, குறித்த திசையில் எல்லையற்ற தூரம் நகரக்கூடிய காய் ஆகும்.[6] மரபுவழிச் சதுரங்கத்தில் (1,0)-ஓட்டியான கோட்டை, (1,1)-ஓட்டியான அமைச்சர், இவை இரண்டினதும் கலவையான அரசி ஆகிய ஓட்டிகள் காணப்படுகின்றன.[7]தேவதை சதுரங்க ஓட்டிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக (1,2)-ஓட்டியான குதிரையோட்டி, (2,3)-ஓட்டியான வரிக்குதிரையோட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[8][6]
தத்திகள்
தத்தி (Hopper) என்பது தடையாக (Hurdle) அமைந்துள்ள இன்னொரு காயைத் தாண்டிப் பாய்வதன் மூலம் நகரும் காய் ஆகும்.[9] இதற்கு எடுத்துக்காட்டாக வெட்டுக்கிளியைக் குறிப்பிடலாம்.[10]
கல்வெட்டுக்கிளிகள்
கல்வெட்டுக்கிளி (Locust) என்பது எதிராளியின் காயைத் தாண்டிப் பாய்வதன் மூலம் அதனைக் கைப்பற்றும் (நகராட்டத்தில் (Checkers) நிகழ்வது போல்) காய் ஆகும்.[11]
கடற்காய்கள்
கடற்காய் (Marine piece) என்பது ஒரே திசைகளில், வழக்கமான நகர்வுகளின்போது ஓட்டியாகவும் கைப்பற்றும்போது கல்வெட்டுக்கிளியாகவும் தொழிற்படும் காய் ஆகும்.[12] கடலமைச்சர், கடற்கோட்டை, கடலரசி, கடலரசர் என்பன முறையே, நீரீயிடு (Nereid), திரைட்டன் (Triton), சைரன் (Siren), பொசைடன் என அழைக்கப்படும்.[12][13]
ஆட்டங்கள்
சீனக் காய்கள்
சீனச் சதுரங்கக் காய்களின் பெறுதிகளாக அமைந்த காய்கள், சீனக் காய்கள் எனப்படும். சீனக் காய்க்கு எடுத்துக்காட்டுகளாகத் தகரி (Pao), பரி (Mao) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[14][15]
சிறப்பியல்புகள்
அரசகாய்கள்
ஆட்டத்தின்போது கைப்பற்ற அனுமதிக்கக்கூடாத காய், அரசகாய் (Royal piece) எனப்படும்.[9] மரபுவழிச் சதுரங்கத்தில் அரசர் ஓர் அரசகாய் ஆகும்.[16]பேரரசரும் காலாள்களும் என்ற சதுரங்க மாறுபாட்டில், பேரரசர் ஓர் அரசகாய் ஆகும்.[17]
இணைந்த காய்கள்
Name
Notes
முடிக்காய் (Crowned piece)
அதன் பொதுவான இயல்புகளுக்கு மேலதிகமாக, அரசர் போலவும் நகரக்கூடிய காய், முடிக்காய் ஆகும்.[18]சப்பானியச் சதுரங்கக் காய்களான திறகன் அரசர், திறகன் குதிரை என்பன முறையே முடிக்கோட்டையும், முடியமைச்சரும் ஆகும்.[19][20]
குதிரைக்காய் (Knighted piece)
அதன் பொதுவான இயல்புகளுக்கு மேலதிகமாக, குதிரை போலவும் நகரக்கூடிய காய், குதிரைக்காய் ஆகும்.[18] எடுத்துக்காட்டாக, அமேசன் என்பது குதிரையரசி ஆகும்.[21]
தாண்டிச்செல்லும் தடையின் நிறத்தை மாற்றக்கூடிய வெட்டுக்கிளி. Chopper எனவும் அழைக்கப்படும்.[29]
மறிமான் (Antelope)
~3/4
(3,4)
தேவதை சதுரங்கப் புதிர்கள்
மூன்று கட்டங்கள் குறுக்காகப் பாய்ந்து, தொடர்ந்து செங்குத்தாக வெளிப்புறம் நோக்கி ஒரு கட்டம் நகரக்கூடியது.[30]
எதிரரசர் (Anti-King)
1*
K
தாக்குதலின்கீழ் இல்லாதபோது, இக்காய் முற்றுகைக்காளாகியிருக்கும். ஒருவரின் எதிரரசர் முற்றுகைக்காளாகியிருக்கும்போது, எதிராளியின் தாக்குதலின்கீழுள்ள ஒரு கட்டத்திற்கு அதனை நகர்த்தமுடியாவிடின், அவர் தோல்வியடைவார். எதிரரசரால் எதிராளியின் காய்களைக் கைப்பற்றமுடியாது. ஆனால், சொந்தக் காய்களைக் கைப்பற்ற முடியும்.[31]
↑Clifford A. Pickover (2011). The Zen of Magic Squares, Circles, and Stars: An Exhibition of Surprising Structures across Dimensions. Princeton University Press. p. 235. ISBN9781400841516.
↑Glenn Overby II (25 சனவரி 2003). "Betza Notation". Chess Variants. Retrieved 1 சூன் 2016.