முற்றுகை (சதுரங்கம்)
வெள்ளைக் கோட்டையால் கறுப்பு அரசன் முற்றுகைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
முற்றுகை (Check) என்பது சதுரங்கம், சீனச் சதுரங்கம், சப்பானியச் சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் அடுத்த நகர்வில் அரசனைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலைக் குறிக்கும்.[1] ஒரு போட்டியாளரின் அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டால், அவர் அடுத்த நகர்வில் அரசனை முற்றுகையில் இருந்து விடுவிக்க வேண்டும் (சாத்தியமானால்). அதாவது, இன்னொரு காயின் மூலம் அச்சுறுத்தலைத் தடுக்கவோ அரசனை எதிரியால் தாக்கப்படாத கட்டங்களுக்கு நகர்த்தவோ முற்றுகைக்காளாக்குகின்ற காயைக் கைப்பற்றவோ வேண்டும்.[2] அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அவ்வரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டுப் போட்டியாளர் தோல்வியை எதிர்கொள்வார்.[3] சதுரங்கம் விளையாடும்போது முற்றுகை என்று கூறுவது போட்டியாளரின் விருப்பத்தைப் பொறுத்தது.[4] அறிமுகம்முற்றுகை என்பது எதிரியின் அரசனை அடுத்த நகர்வில் கைப்பற்றலாம் என்ற நிலைக்குக் கொண்டு வருதல் ஆகும்.[5] சதுரங்கத்தில் ஒரு காய் மூலமும் இரண்டு காய்கள் மூலமும் முற்றுகையை ஏற்படுத்த முடியும். ஆனால், சில சதுரங்க வகைகளில் இரண்டுக்கு மேற்பட்ட காய்களாலும் முற்றுகையை ஏற்படுத்த முடியும். அரசன் முற்றுகைக்காளாக்கப்பட்டு, அரசனை முற்றுகையிலிருந்து விடுவிப்பதற்கு எந்தவோர் ஏற்றுக் கொள்ளப்பட்ட நகர்வும் இல்லாதவிடத்து, அந்நிலைமை இறுதி முற்றுகை என அழைக்கப்படும்.[6] மேலும் அவ்வரசனைக் கொண்டிருக்கும் போட்டியாளர் தோல்வியுறுவார். இறுதி முற்றுகைக்கு ஆளாக்கிய போட்டியாளர் வெற்றியடைவார். தனது சொந்த அரசனை முற்றுகைக்காளாக்கக்கூடிய கட்டத்தில் வைப்பது சதுரங்க விதிமுறைகளுக்கு எதிரானது.[7] அவ்வாறான நகர்வு தவறானதாகக் கருதப்பட்டுப் பின்வாங்கப்படும். ஓர் அரசன் இன்னொரு அரசனை முற்றுகைக்காளாக்க முடியாது.[8] ஏனெனில், இது முதலாவது அரசனை முற்றுகைக்காளாக்கி விடும் (ஏனைய அனைத்துக் காய்களும் அரசனை முற்றுகைக்காளாக்க முடியும்.). முற்றுகையிலிருந்து விடுவித்தல்
வெள்ளை முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது. வெள்ளையானது மூன்று வழிகளிலும் முற்றுகையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.
ஒற்றை முற்றுகையிலிருந்து அரசனை விடுவிப்பதற்கு மூன்று சாத்தியமான வழிகள் உள்ளன.
வலப்பக்கத்திலுள்ள படத்திலே, வெள்ளையானது மூன்று வழிகளின் மூலமும் முற்றுகையிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும்.
வெள்ளை இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டது. வெள்ளையின் அரசன் எங்கேயும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆகவே, வெள்ளை தோற்றுள்ளது. ஓர் அரசனானது இரட்டை முற்றுகைக்காளாக்கப்பட்டால், அடுத்த நகர்வில் அரசன் இரண்டு முற்றுகைகளிலிருந்தும் தன்னை விடுவிக்க வேண்டும். இரண்டு முற்றுகைக்காளாக்கும் காய்களையும் கைப்பற்றுவதோ இரண்டு முற்றுகைகளையும் தடுப்பதோ முடியாத செயல்.[10] அரசனை நகர்த்துவதன் மூலம் மட்டுமே இரட்டை முற்றுகையிலிருந்து அரசனை விடுவிக்க முடியும். ஆனாலுங்கூட, இரட்டை முற்றுகைக்காளாக்கும் காய்களில் ஏதேனும் ஒன்றாவது அடுத்துள்ள கட்டங்களில் இருந்து, அது ஏனைய காய்களால் பாதுகாக்கப்படாவிட்டால், அரசன் அதனைக் கைப்பற்றிக் கொள்ளவும் முடியும். எந்தவொரு வழியிலும் அரசனை முற்றுகையிலிருந்து விடுவிக்க முடியாவிட்டால், அது இறுதி முற்றுகை எனப்படும்.[11] முற்றுகையை அறிவித்தல்நட்பு முறையிலான சதுரங்க விளையாட்டுகளில் முற்றுகைக்காளாக்கும் நகர்வைச் செய்பவர் முற்றுகையை அறிவிப்பார். எனினும் முற்றுகையை அறிவித்தல் சதுரங்கத்தின் விதிமுறைகளின் கீழ் தேவையானதன்று. மேலும் முறையான விளையாட்டுகளில் முற்றுகை அறிவிக்கப்படுவதில்லை. ஆயினுங்கூட 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதி வரை போட்டியாளர் முற்றுகையை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டதுடன், விதிகளின் சில மூலங்கள் அதனை வேண்டி நின்றன. முற்றுகையின் பயன்கள்
வரலாறுதொடக்க கால வடமொழிச் சதுரங்கத்தில் அரசனைக் கைப்பற்றுவதன் மூலமே போட்டிக்கு முடிவு காணப்பட்டது. அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் முறையைப் பாரசீகர்களே அறிமுகப்படுத்தினார்கள். இதனால், சதுரங்க விளையாட்டு உடனடியாகவும் தவறுதலாகவும் முடிவடைவது தவிர்க்கப்படுகிறது. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia