தொகுருல்
தொகுருல், அல்லது வாங் கான் அல்லது ஓங் கான் (மொங்கோலியம்: Тоорил хан டூரில் ஹான் அல்லது Ван хан வான் ஹான்; சீனம்: 王汗; பின்யின்: வாங் ஹான்; இறப்பு கி.பி. 1203) கெரயிடுகளின் கான் ஆவார். இவர் மங்கோலியத் தலைவர் எசுகெயின் ஆன்டா (உடன்பிறவா சகோதரன்) ஆவார். பிற்காலத்தில் செங்கிஸ் கான் என்று அழைக்கப்பட்ட எசுகெயின் மகன் தெமுசினுக்கு இவர் புரவலராகவும் மற்றும் கூட்டாளியாகவும் இருந்தார். சீனாவின் சுரசன் சின் வம்சத்தவர் இவருக்கு "வாங் கான்" என்ற பட்டத்தை வழங்கினர். தெமுசின் சமுக்காவைத் தாக்கியபோது, தொகுருலுக்கு வளர்ந்துவந்த தெமுசினின் மேல் பயம் ஏற்பட்டது. தெமுசினைக் கொல்லத் தொகுருல் சமுக்காவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். ஆனால் தெமுசினால் போரில் டதோற்கடிக்கப்பட்டு தப்பி ஓடினார். தொகுருல் கி.பி. 1203ல் நைமர் இனப் படைவீரர்களால் யார் என்று அடையாளம் தெரியாத காரணத்தால் கொல்லப்பட்டார். செங்கிஸ் கான் தொகுரிலின் சகோதரர் சகா கம்புவின் மகளான சோர்காக்டனி பெகியைத் தன் மகன் டொலுய்க்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு மோங்கே, குப்லாய் மற்றும் ஹுலாகு ஆகியோர் மகன்களாகப் பிறந்தனர். 13ம் நூற்றாண்டில் பிரஸ்தர் ஜான் என்ற புராணக் கதாபாத்திரத்துடன் தொடர்புப்படுத்தப்பட்ட பல ஆசியத் தலைவர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.[2] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia